Home நிகழ்வுகள் #MIvsCSK டெத் ஓவர் பிராவோவுக்கு மரண பயம் காட்டிய பாண்ட்யா

#MIvsCSK டெத் ஓவர் பிராவோவுக்கு மரண பயம் காட்டிய பாண்ட்யா

939
0
#MIvsCSK

#MIvsCSK டெத் ஓவர் பிராவோவுக்கு மரண பயம் காட்டிய பாண்ட்யா

நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த 37 ரன்கள் கடைசி எட்டுப் பந்துகளில் ஹார்த்திக் பாண்ட்யா-பொல்லார்டு ஜோடிகள் அடித்த ரன்கள்.

டெத் ஓவர் நாயகன் என வர்ணிக்கப்பட்ட ப்ராவோ வீசிய ஓவரில் தோனி முன்னிலையில் ஹெலிகாப்டர் ஷாட் பறக்கவிட்டு பாண்ட்யா மரண பயம் காட்டினர்.

மும்பை இந்தியன்ஸ் அணி 150 ரன்களைக் கடப்பது கடினம் எனக் கூறப்பட்ட நிலையில் டெத் ஓவர் மேட்சையே புரட்டிப்போட்டுவிட்டது.

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. சூர்ய குமார் 59, குருனால் பாண்ட்யா 42, ஹார்த்திக் பாண்ட்யா 25 ரன்கள் அதிகபட்சமாக அடித்தனர்.

பின்னர் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 133 ரன்களே எடுத்து தோல்வியைத் தழுவியது.

கேதர் ஜாதவ் மட்டுமே சிறப்பாக ஆடி 58 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here