டிடிவி தினகரன் தேர்தல் அதிகாரிகள் மறித்தும் அதிகாரியாவது ஆட்டுக்குட்டியாவது என சேலத்தில் பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பதிவு செய்யாத கட்சியைத் துவங்கியுள்ளார் தினகரன்.
அதிமுகவை இந்த தேர்தலில் எப்படியாவது வீழ்த்தி கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தினகரன் உள்ளார்.
இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும், இடைத்தேர்தலில் 18 தொகுதியிலும் டிடிவி தினகரன் கட்சி போட்டியிடுகிறது.
எடப்பாடியின் கோட்டை என அழைக்கப்படும் சேலம் தொகுதியில் தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தேர்தல் அதிகாரிகள் வழிமறித்துள்ளனர்.
ஆனால் டிடிவி அதிகாரிகளுக்குப் பிடிகொடுக்காமல் மரண வேகத்தில் பிரச்சார வாகனத்துடன் மாயமாகிவிட்டார்.
டிடிவி தினகரன் பரிசுப்பொட்டி சின்னத்திற்குள் பணம் வைத்து பட்டுவாடா செய்தாக தகவல் கிடைத்த தேர்தல் அதிகாரிகள் சோதனையிடவே வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
ஆனால் அவர்களுக்குப் பிடிகொடுக்காமல் டிடிவி வேகமாகச் சென்றதால் தேர்தல் விதிமுறையை மீறியதாக வீராணம் காவல் துறையினர் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.