இந்திய அணியின் ரன் மெஷின்: கிளார்க் புகழ்ந்த அந்த வீரர் யார் தெரியுமா?
வரலாற்றில் இதுவரை ஒருநாள் போட்டி விளையாடிய வீரர்களில் மிகச்சிறந்தவர் கோலி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கிளார்க் தெரிவித்துள்ளார்.
30 வயதான இந்திய அணியின் கேப்டன் கோலி இதுவரை ஒருநாள் போட்டியில் 10385 ரன்களை வெறும் 219 போட்டிகளில் அடித்துள்ளார்.
சராசரி 59-க்கும் மேல்வைத்து 39 சதங்களும் அடித்துள்ளார். மின்னல் வேகத்தில் ரன் அடிப்பதால் ரன் மெஷின் என்று அழைக்கப்படுகிறார்.
விராத் கோலி தலைமையில் இந்திய அணி, ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் வரலாறு காணாத வெற்றிபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோலி களத்தில் அவ்வப்போது கோபத்தை வெளிப்படுத்தினாலும், போட்டியின் மீது கொண்டுள்ள ஈடுபாடும், சாதனைகளும் அளப்பரியது.
மேலும் கிளார்க், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் தற்போதைய ஃபார்ம் இந்திய அணிக்கு மேலும் வலுசேர்க்கும்.
அது மட்டுமில்லாமல் தோனி அணியின் இலக்கிற்கு ஏற்றாற்போல் பேட்டிங் செய்வார் என்பது அவருடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியின் இன்னிங்சை பார்க்கும் பொழுது தெளிவாக தெரிகிறது.
மேலும், ஹார்த்திக் பாண்ட்யாவின் பேட்டிங் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் கூடுதல் வலுசேர்க்கும். வருகின்ற உலக கோப்பை அணியில் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன்.
உலக கோப்பையில் இந்தியஅணி தான் வெற்றி பெரும் என்று நம்புகிறேன் எனவும் கூறினார்.