Home நிகழ்வுகள் ஒரே நேரத்தில் மூன்று தூக்குதுரை: அதிரவைத்த ரசிகர்கள்!

ஒரே நேரத்தில் மூன்று தூக்குதுரை: அதிரவைத்த ரசிகர்கள்!

1469
0
ஒரே நேரத்தில் மூன்று தூக்குதுரை

ஒரே நேரத்தில் மூன்று தூக்குதுரை: அதிரவைத்த ரசிகர்கள்!

ஜல்லிக்கட்டு காளை ஒரு புறம் காளையர்களை தூக்கி அடிக்க, இன்னொரு புறம் மகேந்திர சிங் தோனி பந்தை தூக்கிஅடிக்க, தியேட்டரில் விஸ்வாசம் ஹிட் அடிக்க…

ஒரே நேரத்தில் எத்தனை அடிக்க. ஒரே நேரத்தில் மூன்று தூக்குதுரைகள் மாறி மாறி இன்ப வெள்ளத்தில் நனைய வைத்துவிட்டனர் இந்த வருட பொங்கலில்…

சென்ற ஆட்டத்தில் தோனி அடிக்கவில்லை. அவ்வளவு தான் “வேல்ர்ட் கப்” வரை “பாடி” தாங்காது என இஷ்டத்துக்கு கலாய்த்தனர்.

இன்று மரண காட்டு காட்டி, திகிலுடனும் திகைப்புடனும் வெற்றிக் கனியைப் பறித்து தந்துள்ளார் தோனி.

எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிவிட முடியாது. எல்லோருக்குமே ஒரு சரிவு இருக்கத்தான் செய்திருக்கிறது.

ஒரு போட்டியில் விளையாடவில்லை எனில் அந்த வீரரின் வீட்டில் கல்லெடுத்து அடிப்பதே நம் ரசிகர்களின் வழக்கமாகிவிட்டது.

சமூக வலைத்தளம் வந்தபின் நேராக டிவிட்டருக்குச் சென்று சம்பந்தப்பட்டவரை டாக் செய்து கலாய்ப்பது வாடிக்கையாகி விட்டது.

இதுமிகவும் வேதனையான விஷயம். அஜித், தோனி இருவருக்குமே இது பொருந்தும். இருவருக்கும் விமர்சனங்கள் புதிதல்ல.

Previous articleசபரிமலைக்குள் நுழைந்த பெண்: அடித்து துவைத்த மாமியார்!
Next articleமெரினாவில் கூடவுள்ள 2 லட்சம்பேர்: போலீசார் பலத்த பாதுகாப்பு
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here