Home நிகழ்வுகள் தமிழகம் மெரினாவில் கூடவுள்ள 2 லட்சம்பேர்: போலீசார் பலத்த பாதுகாப்பு

மெரினாவில் கூடவுள்ள 2 லட்சம்பேர்: போலீசார் பலத்த பாதுகாப்பு

552
0
மெரினாவில்

மெரினாவில் கூடவுள்ள 2 லட்சம்பேர்: போலீசார் பலத்த பாதுகாப்பு

பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்வர். மாட்டுப்பொங்கலுக்கு மாடுகளை வணங்குவர். காணும் பொங்கலுக்கு?

காணும் பொங்கலை இயற்கை அழகுடன் கொண்டாடுவதே வழக்கம். குறிப்பாக சென்னையிலேயே பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது.

மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி உயிரியல் பூங்கா, கோல்டன் பீச் போன்ற இடங்களில் மக்கள் கூடுவது வழக்கம்.

காலையில் குடும்பத்துடன் கூடும் மக்கள்,  தங்களுக்கான உணவுகளை சமைத்து எடுத்துச் செல்வர். இல்லையேல் அங்கேயே சமைக்கவும் செய்வர்.

இந்த வருடம் மெரினாவில், காணும் பொங்கலை ரசிக்க 2 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனால் கூட்டத்தை கட்டுபடுத்த, அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலில் இறங்கி குளிக்க எப்போதும்போல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் மக்கள் இறங்குவதை தடுக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைப்படை வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

குழந்தைகள் காணமல்போவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள் கையில், பெற்றோரின் மொபைல் எண்கள் கட்டப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.

Previous articleஒரே நேரத்தில் மூன்று தூக்குதுரை: அதிரவைத்த ரசிகர்கள்!
Next articleநிலவில் தாவரம்: மெய்சிலிர்க்க வைத்த ஆசிய தேசம்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here