Home நிகழ்வுகள் ஒரு பந்தில் 8 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது! தெரியுமா?

ஒரு பந்தில் 8 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது! தெரியுமா?

1780
0
ஒரு பந்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் 8 ரன்கள் most runs off single ball

ஒரு பந்தில் 8 ரன்கள் வரை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று முறை இந்த சாதனை படைக்கப்பட்டது. ஒரு பந்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் (most runs off single ball).

ஒரு பந்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் (most runs off single ball)

கிரிக்கெட் விளையாட்டில், ஒரு பந்தில் அதிகபட்சம் எத்தனை ரன்கள் எடுக்க முடியும் என்று கேட்டால், உடனே 6 ரன்கள் எனக் கூறுவோம்.

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்தில் 8 ரன்கள் அடிக்கப்பட்ட சம்பவம் மும்முறை நிகழ்ந்துள்ளது. இருமுறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளது.

முதல் சாதனை

1928-ல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து  இடையே நடந்த டெஸ்ட் தொடரில், முதன்முதலில் இச்சாதனை படைக்கப்பட்டது. இங்கிலாந்து பேட்ஸ்மேன் ‘பேட்ஸி ஹெண்ட்ரன்’ பந்தினை அடித்துவிட்டு நான்கு ஓட்டங்கள் ஓடியே எடுத்தார்.

நான்காவது ஓட்டத்தின்போது பந்தை, ஸ்டெம்பை நோக்கி எறிந்தார் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர். எதிர்திசையில் யாரும் பந்தை பிடிக்காததால், பந்து எல்லைக்கோட்டை தாண்டிச் சென்றது.

எனவே ‘ஓவர் துரோ’ முறையில், கூடுதலாக நான்கு ரன்கள் கொடுக்கப்பட்டது. மொத்தம் எட்டு ரன்கள் கிடைத்தது. எட்டு ரன்கள் அடித்த முதல் வீரர் பேட்ஸி ஆவார். ஒரே பந்தில் 8 ரன்கள் எடுக்கப்பட்டதும் இதுவே முதல் முறை.

இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் சாம்பவான் ‘டான் பிராட்மேன்‘ அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது முறை

1980-ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதேபோன்று 8 ரன்கள் எடுக்கப்பட்டது.

நியூஸிலாந்தை சேர்ந்த ஜான் ரைட் (இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்) பந்தை அடித்துவிட்டு 4 ரன்கள் எடுத்தார். பந்தை ஸ்டெம்பை நோக்கி எறியும்போது எல்லைக்கோட்டைக் கடந்தது. இதன் மூலம் 8 ரன்கள் கிடைத்தது.

மூன்றாவது முறை

2004-ல் தென்ஆப்ரிக்காவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இச்சாதனை படைக்கப்பட்டது. மூன்றாவது முறை சற்று வித்தியாசமாக 8 ரன்கள் எடுக்கப்பட்டது.

வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன்லாரா, பந்தை அடித்துவிட்டு மூன்று ஓட்டங்கள் எடுத்தார். அப்போது, தென்ஆப்ரிக்காவின் விக்கெட்கீப்பராக இருந்த ‘மார்க் பவுச்சர்’ பந்தை வேகமாக எறிந்தார்.

பந்து மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கீப்பர் ஹெல்மெட்மீது பட்டுவிட்டது. கீப்பர் ஹெல்மெட்மீது பந்துபட்டால் 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படுவது வழக்கம். எனவே மொத்தம் 8 ரன்கள் கிடைத்தது.

ஒருவேளை பிரையன் லாரா நான்கு ரன்கள் ஓடி இருந்தால் மொத்தம் 9 ரன்கள் கிடைத்திருக்கும். முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டிருக்கும்.

அவருடைய துரதிஷ்டவசம், அந்த போட்டிக்கு சிலநாட்கள் முன்புதான் ‘ஓவர் துரோ’ மூலம் கிடைக்கும் ரன்கள் பேட்ஸ்மேன் கணக்கில் சேர்க்கப்படாது என விதிமுறை மாற்றியமைக்கப்பட்டது.

அப்போட்டியில் 196 ரன்களில் லாரா அவுட். ‘ஓவர் துரோ’ ரன்களை பேட்ஸ்மேன் கணக்கில் சேர்த்திருந்தால், லாராவிற்கு இரட்டைச் சதம் கிடைத்திருக்கும். மேலும், ஒரு பந்தில் அதிக ரன் அடித்த வீரர் பட்டியலிலும் இடம்பெற முடியவில்லை.

ஒரு பந்தில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ரன்கள் கணக்கிலேயே இச்சாதனை சேர்த்துக்கொள்ளப்பட்டது. இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here