ஒருநாள் போட்டி: இந்தியாவின் பாட்ஷா பழிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 347 ரன்கள் குவித்தும் தோல்வியைத் தழுவியுள்ளது.
NZvIND T20
நியூசிலாந்து அணியை டி20 தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற விடாமல் 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.
இதில் இரண்டு முறை சூப்பர் ஓவர் வரை சென்று மிகவும் த்ரில் சீரியசாக இந்த டி20 தொடர் அமைந்தது. பல சுவாரஸ்ய திருப்புமுனை கொண்ட தொடராக இது இருந்தது.
ஆனால், நடைபெற்று முடிந்த ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் பாட்ஷா பழிக்கவில்லை. நியூசிலாந்து வெற்றி பெற்றது.
NZvIND ODI 1st Match
நியூசிலாந்து vs இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் எடுத்தது. சௌதி 2 விக்கெட்டுகளும்; கோலின், சோதி ஆகியோர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஷ்ரேயாஸ் அய்யர் முதல் சதம்
இன்றைய போட்டியில் ஒப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கிய பிரித்விஷா 20, மயங்க் அகர்வால் 32 ரன்களில் அவுட் ஆகினர்.
அதன்பிறகு விராட் கோலி ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் இணைந்து ரன் வேட்டையை துவங்கினர். விராட் கோலி 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஷ்ரேயாஸ் அய்யர் – கே.எல்.ராகுல் ஜோடி மளமளவென ரன்களைக் குவித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஷ்ரேயாஸ் அய்யர் இன்றைய போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
கே.எல்.ராகுல் இறுதிவரை நின்று ஆடி 88 ரன்கள் குவித்தார். மறுமுனையில் கேதர் ஜாதவ் 26 ரன்கள் எடுத்தார்.
ராஸ் டெய்லர் விஸ்வரூபம்
பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதல் பொறுமையாக விளையாடியது. ரன் சற்று மந்தமாகவே வந்தது.
ஹென்றி 78 ரன்கள், குப்தில் 32 ரன்கள், பிலுண்டெல் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். ரஸ் டெய்லர் அந்த சமயத்தில் சற்று கடினமான கேட்ச் கொடுத்தார்.
ஆனால் அதை குப்தில் பிடிக்கமால் விட்டு விட்டார். அதன் பிறகு ரஸ் டெய்லர் விக்கெட்டை கைபற்றவே முடியவில்லை.
ஓவர்கள் குறையக் குறைய ராஸ் டெய்லர் ரன் வேட்டை அதிகரித்துக்கொண்டே இருந்தது. 48.1 ஓவரில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழந்து 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டாம் லதம் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதிவரை களத்தில் நின்று நியூசிலாந்து அணியை வெற்றிபெற வைத்த ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.