Home Latest News Tamil சாக்ஸி-அனுஷ்கா: ஒரே பள்ளி, ஒரே மாதிரி கணவர்கள் – என்ன ஒரு அதிசயம்!

சாக்ஸி-அனுஷ்கா: ஒரே பள்ளி, ஒரே மாதிரி கணவர்கள் – என்ன ஒரு அதிசயம்!

738
0
சாக்ஸி-அனுஷ்கா

சாக்ஸி-அனுஷ்கா: ஒரே பள்ளி, ஒரே மாதிரி கணவர்கள் – என்ன ஒரு அதிசயம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் மனைவியும் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவியும் பள்ளிப்பருவத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அஸ்ஸாம் மாநிலத்தில் மர்கேரிதா என்ற இடத்தில் இருக்கும் சென்ட் மேரிஸ் பள்ளியில் இருவரும் ஒன்றாகப் படித்துள்ளனர்.

அந்தப் பள்ளியில் நடந்த விழாவில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அனுஷ்கா பிங்க் கலர் ஆடையிலும் சாக்ஸி ஏஞ்செல் வேடத்திலும் உடை அணிந்திருக்கின்றனர்.

குழந்தையில் சாக்ஸி தோனி அப்படியே ஷிவா தோனியைப்போல் இருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் வாலிப பருவத்தில் இருவரும் தங்கள் நண்பர்களுடன் இருகின்றனர்.

இந்த அனைத்துப் புகைப்படங்களும் அனுஷ்கா ஷர்மா ஃபேன் கிளப் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

சாக்ஸி குறித்து அனுஷ்கா கூறியது

2013-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அனுஷ்கா மீண்டும் சாக்ஸியைப் பார்க்கும் பொழுது “நானும் சாக்ஸியும் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு சின்னக் கிராமத்தில் ஒரே பள்ளியில் படித்தும், வசித்தும் வந்தோம். சாக்ஸி எப்பொழுதும் வேடிக்கையாகவும் காமெடியாகவும் பேசுவாள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது, இருவரும் இந்தியாவின் இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களின் மனைவிகள் ஆவர். அதுவும் இந்திய அணியின் கேப்டன்களின் மனைவி.

இரு பள்ளித்தோழிகள் சொல்லிவைத்தது போன்று இந்திய அணியின் கேப்டன்களை மணந்துள்ளனர். என்ன ஒரு அதிசயம்!

Previous articleசன் பங்களாவும் மாறனும்: இத்தனை கோடிகளா? – வேற லெவல்
Next articleஅமெரிக்கா வெள்ளையாக மாறிவிட்டது; அண்டார்டிகாவை மிஞ்சியது குளிர்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here