சன் பங்களாவும் மாறனும்: இத்தனை கோடிகளா? – வேற லெவல்
முரசொலி மாறன் இல்லாமல் கருணாநிதி இல்லை. கருணாநிதி இல்லாமல் மாறன் இல்லை. கருணாநிதி சட்டசபை, மாறன் பார்லிமென்ட் இப்படி இருவருக்குள்ளும் ஒரு புரிதல் உண்டு.
இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்று விரல்விட்டு என்ன முடியாத அளவிற்கு பெருகிவிட்டனர்.
முரசொலி மாறனின் மகன் கலாநிதிமாறன். சன் குழுமத்தை துவங்கியவர். முதன் முதலில் கேபிள் டிவியில் துவங்கி பின்பு, லோக்கல் சேனல் அப்புறம் சேட்டிலைட் சேனல் என உயர்ந்தார்.
டிடி பொதிகைக்குப்பின் சன்டிவி என்றால் பட்டிதொட்டி எங்கு பேமஸ். விஜய் டிவியும் அந்த நேரத்தில் உதயமானது. அதை ஸ்டார் நெட்வொர்க் அப்போதே விலைக்கு வாங்கி ஸ்டார்விஜய் என மாற்றியது.
ஸ்டார் நெட்வொர்க் இன்று இன்டர்நேசனல் சேனலாக உயர்ந்துவிட்டது. ஆனால் சன் நெட்வொர்க் தென்னிந்தியாவிற்கு உள்ளேயே முடங்கிப்போனது.
அந்த நேரத்திலேயே விளையாட்டுச் சேனல் துவங்கியிருந்தால் சன்நெட்வொர்க்கும் ஸ்டாருக்கு போட்டியாக உருவெடுத்து இருக்க வாய்ப்பு உண்டு.
தற்பொழுது சன் நெட்வொர்க் வடஇந்தியா பக்கம் கால் பதித்துள்ளது. சன் பங்களா என்ற சேனலை துவங்கி உள்ளனர்.
சன்டிவியின் தமிழ் மாலை என்பதுபோல் மனதில் பங்காளி “Mone Prane Bengali” என்ற ஸ்லோகனுடன் ஒளிபரப்பாக உள்ளது.
பிப்ரவரி 3 முதல் வங்காள மொழியில் ஒளிபரப்பாக உள்ளது. பங்களாதேஷ் நாட்டிலும் அதிக அளவு வங்கமொழி பேசுவோர் உள்ளதால் அங்கும் இது, வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
120 கோடி சன் பங்களா சேனலுக்கு செலவு செய்வதற்கு மட்டுமே ஒதுக்கி உள்ளனர். இந்த தொகையில் சீரியல், நிகழ்சிகள் போன்றவை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
விரைவில் மராத்தி மொழியிலும் சேனல் துவங்கப்பட உள்ளது. ஸ்டாலின் கொல்கத்தா சென்று வந்த நிலையில் இந்த சேனல் துவங்கப்பட்டுள்ளது.
இவ்வளவு நாள் இல்லாமல், வடஇந்தியாவிலும் இப்போது கால்பதிக்க முடிவு செய்தது ஏன்? எனக் கேள்வியும் எழுந்துள்ளது. இதில் அரசியல் நோக்கமும் கலந்திருக்கலாம் என கருத்து நிலவி வருகிறது.