Home சினிமா இந்திய சினிமா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நம்பர் நடிகை – அப்பா யார்?

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நம்பர் நடிகை – அப்பா யார்?

1237
0
வாடகைத் தாய்

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நம்பர் நடிகை – அப்பா யார்?

இந்தியாவில் நம்பரில் பெயர் ஆரம்பிக்கும் பிரபலங்கள் ‘ஏக்’தா கபூர், ‘த்ரி’ஷா, ‘நயன்’தாரா. இவர்களின் மூவருக்கும் உள்ள ஒற்றுமை இன்னும் திருமணமாகவில்லை.

த்ரிஷாவின் வயது 35. கல்யாணம் ஏற்பாடு நிச்சயதார்த்தம் வரை சென்று அத்தோடு நின்று விட்டது. நயன்தாரா வயது 34. இரண்டு காதல் படுதோல்வி. மூன்றாவது காதலருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை.

ஏக்தா கபூர் வயது 43. ஹிந்தி நடிகர் ஜிதேந்திராவின் மகள். ஏக்தா விளம்பரப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் தயரிப்பாளராகவே பிரபலமாகியுள்ளார்.

30 வயது என்றாலே நம்ம ஊரில் முத்துன கத்தரிக்காய் என்று கூறுவார்கள். ஆனால் ஏக்தா 40 வயதைக் கடந்தும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

பார்டி, பப், டான்ஸ் என ஹிந்தி நடிகைகளை விட கவர்ச்சியான உடைகளில் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தும் தயாரிப்பாளர் ஏக்தா எனப் பெயர் பெற்றார்.

இந்நிலையில், ஏக்தா கபூர் கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 27-ம் தேதி வாடகைத்தாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது. கருமுட்டை ஏக்தா கபூருடையது. அப்போ அப்பா யார்? எனக் கேள்வி எழுந்துள்ளது.

ஏதாவது ஒரு நடிகரிடம் விந்தணுக்கள் தானமாக பெற்றிருக்கலாம் என ஒரு கருத்துநிலவி வருகிறது. உண்மை என்ன என அவர் தான் தெரிவிக்கவேண்டும்.

ஏக்தாவின் தம்பி, நடிகர் துஷர் கபூரும் திருமணம் ஆகாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பரில் பெயர் வைத்து திரைப்பிரபலங்களாக மாறினாலே, திருமணத்திற்கும் அவர்களுக்கும் ராசியே இருப்பதில்லை போல…

Previous articleகிவிஸ் பௌலிங் தாங்க முடியாமல் சிதறிய இந்திய பேட்ஸ்மேன்கள்
Next articleசன் பங்களாவும் மாறனும்: இத்தனை கோடிகளா? – வேற லெவல்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here