Home Latest News Tamil கிவிஸ் பௌலிங் தாங்க முடியாமல் சிதறிய இந்திய பேட்ஸ்மேன்கள்

கிவிஸ் பௌலிங் தாங்க முடியாமல் சிதறிய இந்திய பேட்ஸ்மேன்கள்

488
0
கிவிஸ் பௌலிங்

கிவிஸ் பௌலிங் தாங்க முடியாமல் சிதறிய இந்திய பேட்ஸ்மேன்கள்

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் மூன்று போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதற்கிடையில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் நான்காவது போட்டியை துணை கேப்டன் ரோஹித் லீட் செய்கிறார்.

ஏற்கனவே, காயம் காரணமாக சென்ற போட்டியில் விளையாடாத தோனி நான்காவது போட்டியிலும் விளையாடவில்லை. கேப்டன் கோலிக்கு பதிலாக 19 வயது சுப்மன் கில்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்க செய்ய முடிவெடுத்தது. பேட்டிங் இறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்தது.

21 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி 40 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது வழக்கம் போல ஹார்த்திக் பாண்ட்யா 4 பவுண்டரிகள் அடித்துவிட்டு அவுட் ஆகினார்.

குல்தீப் மற்றும் சகால் பௌலிங்கில் கூட்டணி சேர்வதுபோல் பேட்டிங்கிலும் பார்ட்னர்ஷிப் செய்து ஆறுதல் ரன்களை அடித்தனர். இறுதியில் 92 ரன்களில் சுருண்டது இந்திய அணி.

இந்தியாவின் 7வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அருமையாக பந்து வீசிய ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகள் எடுத்து 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பின்னர் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 14.4 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 93  ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.

Previous articleகாதலி சுரேகா: கொலை செய்ய முயற்சிக்கிறார் இயக்குனர் அமீர்
Next articleவாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நம்பர் நடிகை – அப்பா யார்?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here