சலீம் மாலிக் (Salim malik pakistan crickter) பாகிஸ்தான் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், பல போட்டிகளில் நின்று நிலைத்து விளையாடி வெற்றிகளை தேடி தந்துள்ளார். அவருடைய மணிக்கட்டு அடிகள் ( வ்ரிஸ்ட் ஷாட்ஸ் ) மிக லாவகமாக இருக்கும் .
1995 ஆம் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு லஞ்சம் அளித்து சூதாட முற்பட்டதாக அவர் மீது புகார் வந்தது , அதை விசாரித்த ஐசிசி வாழ் நாள் தடை விதித்தது . கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக வாழ் நாள் தடை அளிக்கப்பட முதல் வீரர் இவர் தான் என்பது குறிப்பிடத் தகுந்தது.
“எனக்கு 2000 மாம் ஆண்டே நான் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற முடியாத அளவிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது , இன்று அது நடந்து இரு தசாப்தங்கள் முடிந்து விட்டது . என்னுடைய மேல்முறையீடுகள் தோல்வி அடைந்து விட்டது.
என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்கை முடிந்தே விட்டது. ஆனால் நான் பாகிஸ்தான் அணிக்காக கிட்டத்தட்ட 300 ஒரு போட்டிகள் விளையாடி உள்ளேன். 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி பெருமை தேடி தந்துள்ளேன்.
எனக்குள் இருக்கும் கிரிக்கெட் திறமையை பிறருக்கு குடுக்க நினைக்கிறன் , ஆம் நான் பயிற்சியாளராக பணியாற்ற விரும்புகிறேன்.
அதற்க்கு என் மீது சுமத்தப்பட்ட இந்த வாழ் நாள் தடை பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது , இனி அந்த தடையால் என்ன பயன் ?” இவ்வாறு தெரிவித்துள்ளார் சலீம் மாலிக்.
சா.ரா