Home Latest News Tamil அக்தர் திரும்பி வந்துட்டாரு; தொடை நடுங்கும் பேட்ஸ்மேன்கள்!

அக்தர் திரும்பி வந்துட்டாரு; தொடை நடுங்கும் பேட்ஸ்மேன்கள்!

0
859
அக்தர் திரும்பி வந்துட்டாரு

அக்தர் திரும்பி வந்துட்டாரு; தொடை நடுங்கும் பேட்ஸ்மேன்கள்!

கிரிக்கெட்டி விளையாட்டில் வேகப்பந்து வீச்சாளர் என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வரும் முதல் வீரர் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர்.

அக்தர் பந்து வீச வந்தாலே எதிரே நிற்கும் பேட்ஸ்மேன்கள் தொடை நடுங்குவார்கள். மிடில் ஸ்டம்ப் தெறித்து ஓடும்.

வேகப்பந்து வீச்சில் மிகவும் பேர் போன அக்தர் மீண்டும் கிரிக்கெட் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தற்பொழுது கிரிக்கெட் பார்க்கும் 2k குழந்தைகளுக்கு வேகம் என்றால் என்னவென்று நான் காட்டுகிறேன்.

கபாலி பட ரஜினி வசனம் போல, 25 வருசத்துக்கு முன்னாடி கபாலி எப்படி போனானோ அப்படியே வந்துட்டானு சொல்லு என்ற ஸ்டைலில் ட்வீட் செய்த அக்தர் பிப்ரவரி 14-ஆம் தேதி வருவதாக கூறினார்.

பிப்ரவரி 14-ம் தேதி பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் தொடங்குகிறது, இதனையடுத்து 6 பிஎஸ்எல் அணிகளில் எந்த அணியில் ஷோயப் அக்தர் ஆடுகிறார் என்று ரசிகர்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு வருகின்றனர்.

வாசிம் அக்ரமும், ஷோயப் மாலிக்கும் அக்தரின் மீள்வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here