WWCT20I SAWvsPW; பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, வோல்வர்ட் அரைசதம், தென் ஆப்ரிக்கா மகளிர் அணி வெற்றி, அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்.
7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.
பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும்,
பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது
சிட்னி மைதானத்தில் பிரிவு ‘பி’ யில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் WWCT20I SAWvsPW மோதியது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது
வோல்வார்ட் அரைசதம்
பாகிஸ்தானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்கா மகளிரணி ரன் எடுக்க திணறினார்கள், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் அதிகபட்சமாக
வோல்வார்ட் 53 ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். காப் 32, டு பிரிஷ் 17, சுனே லோஸ் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் பய்க் 2விக்கெட்டும், ஷா, தார், அன்வர் மற்றும் அமின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தென்னாபிரிக்கா மகளிர் அணி வெற்றி
137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சவாரியா கான் 31 ரன்கள், சாவைத் 17 ரன்கள், ரியாஸ் 39 ரன்கள் எடுத்தனர்.
தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் மஃபா, இஸ்மாயில், நைய்கிரிக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்கா அணியில் அரை சதம் அடித்த லோரா வெல்வட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
INDWvsSLW-WWCT20I; இலங்கையை வீழ்த்தியது இந்தியா
அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தென்ஆப்பிரிக்கா அணி பிரிவு ‘பி’ல் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
பாகிஸ்தான் அணி இந்த தோல்வியின் மூலம் உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்தது, கடைசி போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.
வருகிற மார்ச் 3ம் தேதி இரு அணிகளும் கடைசியில் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தாய்லாந்த் அணியையும், தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
இன்று நடக்க உள்ள மற்றொரு போட்டியில் இதே மைதானத்தில் இங்கிலாந்து மகளிர் அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிரணி மோதுகிறது இருவருக்குமே இந்த போட்டி முக்கியமானதாக இருக்கும்.
WWCT20I ENGw vs PAKw: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி
உலககோப்பை புள்ளி பட்டியல்
பிரிவு ஏ
TEAM P W L P
IND : 4 4 0 8
NZ : 2 1 1 2
AUS : 3 2 1 4
SL : 3 0 3 0
BAN : 2 0 2 0
பிரிவு பி
TEAM P W L P
RSA : 3 3 0 6
ENG : 3 2 1 4
PAK : 3 1 2 2
WI : 2 1 1 0
THAI : 3 0 3 0