Home சினிமா கோலிவுட் Master Second Single: மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் எப்போது தெரியுமா?

Master Second Single: மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் எப்போது தெரியுமா?

343
0

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வெளியானது.

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், நாசர், சஞ்சீவ், கௌரி கிஷான், பிரிகிதா சகாயா, அழகம் பெருமாள் ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் குறித்து தயாரிப்பு நிறுவனம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விரைவில், மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வரும் என்று தெரிவித்துள்ளது.

அதோடு, மாஸ்டர் மாதம் தொடங்கிவிட்டது. இனி, அடுத்தடுத்து, மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக், மாஸ்டர் இசை வெளியீடு, மாஸ்டர் டிரைலர் அப்டேட் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சிங்கிள் டிராக சூப்பர் கூல் டிராக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, படப்பிடிப்பின் கடைசி நாளின் போது விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தம் கொடுத்து அசத்தியுள்ளார். இது படக்குழுவினர் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முத்தம் விஜய் சேதுபதி கொடுத்த 1,35,263 ஆவது முத்தம் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய், தனது 65 ஆவது படத்தில் இயக்குநர் சுதா கொங்கரா உடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் வெளியான பிறகு தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.

இதே போன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை வரும் 5 ஆம் தேதி சென்னையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தலைவர்169 படத்தை கமல் ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleWWCT20I SAWvsPW; பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி
Next articleSuriya39: சூர்யா39 படத்திற்கு அருவா என்று டைட்டில் வைத்த இயக்குநர் ஹரி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here