Home சினிமா கோலிவுட் Suriya39: சூர்யா39 படத்திற்கு அருவா என்று டைட்டில் வைத்த இயக்குநர் ஹரி!

Suriya39: சூர்யா39 படத்திற்கு அருவா என்று டைட்டில் வைத்த இயக்குநர் ஹரி!

331
0

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 39 ஆவது படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யா உடன் இணைந்து, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நடக்க இருப்பதாக தெரிகிறது.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா 39 ஆவது படத்தை யார் இயக்குகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தற்போது பதில் கிடைக்கும் வகையில், அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, சூர்யா39 ஆவது படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார் என்றும், இந்தப் படத்திற்கு அருவா என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக, ஞானவேல்ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். இது சூர்யா – ஹரி இணையும் 6ஆவது படம். இது ஹரியின் 16ஆவது படம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இவர், சூர்யா, ஹரியுடன் முதல் முறையாக இணைந்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் படத்தை தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடித்து இந்த ஆண்டின் தீபாவளிக்கு வெளியீடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக #Suriya39 என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இதற்கு முன்னதாக, சூர்யாவின் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். இந்த 5 படங்களுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

அதனால், சூர்யா – ஹரியின் கூட்டணியில் உருவாகும் சூர்யா39 அருவா படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65ஆவது படமான தளபதி65 படத்தை இயக்க இருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleMaster Second Single: மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் எப்போது தெரியுமா?
Next articleMookuthi Amman First Look: மூக்குத்தி நயன்தாரா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here