கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி அளிக்கும் விதமாக ஐபிஎல்யின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் 10 கோடி ரூபாய் அளித்துள்ளது
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.
உலகெங்கும் 204 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் உயிர்களைக் கொன்று பல லட்சம் மக்களை பாதித்துள்ளது.
கனடா பிரதமரின் மனைவி, பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமர், ஸ்பெயின் இளவரசி போன்றோரும் இந்தக் கொரோனா தொற்றால் பாதித்துள்ளார்கள்.
பல நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள் குறிப்பாக அமெரிக்கா ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகள் பல பாதிப்புகளை அடைந்துள்ளது
இந்தியா பிரதமர் மோடி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் தொலைக்காட்சிகளும் தோன்றிய பிரதமர் மோடி “மக்களிடம் உங்களால் முடிந்த தொகையை குருநாதருக்கு பணிகளுக்காக தாருங்கள் என்று வேண்டுகோள் வைத்து இருந்தார்”
இதற்கு பல தொழிலதிபர்கள் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் நிதி அளித்து வந்தார்கள். பல முன்னணி தொழிலதிபர்களும் நிதி அளித்து வருகிறார்கள்.
கிரிக்கெட் வீரர்களில் கௌதம் கம்பீர் மருத்துவ உபகரணங்களுகாக 50 லட்சம், சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், ரோகித் 80 லட்சம், கங்குலி 50 லட்சம் பிசிசிஐ 50 லட்சம் யுவராஜ் சிங் 80 லட்சம் கோலி மற்றும் அனுஷ்கா 3 கோடி போன்ற தொகை அளித்தார்கள்.
தற்போது ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் கரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 10 கோடி ரூபாய் அளித்துள்ளது.
நிதி அளித்ததை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது
Sun TV Group (SunRisers Hyderabad) is donating Rs.10 Crores towards Corona Covid-19 relief measures. #COVID19 #CoronaUpdate
— SunRisers Hyderabad (@SunRisers) April 9, 2020
https://platform.twitter.com/widgets.js
கிரிக்கெட் சார்ந்த நிதியில் இதுவே அதிகம் பிசிசிஐ 50 லட்சம் மட்டுமே அளித்திருந்தது
மற்ற அணிகள் நிதி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது