WWCT20I ENGw vs PAKw: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி. மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி. இங்கிலாந்து vs பாகிஸ்தான் மகளிர் அணி.
WWCT20I ENGw vs PAKw
பிப்.27: 7-வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது.
பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது.
இன்று பிரிவு ‘பி’ யில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
விக்கெட் சரிவு
இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ட் மற்றும் ஜோன்ஸ் களமிறங்கினார்கள்.
வெய்ட் 16 ரன்னிலும் ஜோன்ஸ் 2 ரன்களும் எடுத்து நடையை கட்டினார்கள். சைவர் மற்றும் நைட் சேர்ந்து ரன்களை சேர்த்தனர்.
சைவர் 36 ரன், நைட் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து இறங்கிய வில்சன் 22 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து இருபது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஆட்டமிழக்காமல் வின்ஃபில்ட் 4 ரன்னும், சோபி எச்கிள்ஸ்டோன் 2 ரன்னும் களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அன்வர் 3 விக்கெட்டும் நிடா தார் 2 விக்கெட்டும் பையக் மற்றும் அலியா ரியாஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் தோல்வி
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியினர் ரன்கள் சேர்க்க திணறினார்கள்.
பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
பாகிஸ்தான் அணியில் முனிபா அலி 10, ஜவேரியா கான் 16, கேப்டன் மருஃப் 4, தார் 5, ஜவாது 4, சோகய்ல் 7, நவாஸ் 6, பைய்க் 0, இக்பால் 1 ரன்கள் சேர்த்து வெளியேறினார்கள்.
பாகிஸ்தானின் ரியாஸ் மட்டும் 41 ரன்கள் சேர்த்து அந்த அணிக்கு அறுதலாக அமைந்தது. மற்ற யாரும் ரன்கள் சேர்க்காதது தோல்விக்கு காரணம்.
இங்கிலாந்து தரப்பில் சரப்சோலே 3 விக்கெட்டும், ஃபர்ண்ட் மற்றும் எச்கிள்ஸ்டோன் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்.
ஹீதர் நைட் ஆட்டநாயகன்
47 பந்தில் 62 ரன்கள் எடுத்த இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இவர் தாய்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து vs பாகிஸ்தான்
இங்கிலாந்து தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வருகிற மார்ச் 1-ஆம் தேதி சிட்னியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிறது.
அதே மார்ச் 1 ஆம் தேதி அதே சிட்னி மைதானத்தில் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதுவும் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிறது.
உலககோப்பை புள்ளி பட்டியல்
பிரிவு ஏ
TEAM P W L P
IND : 3 3 0 6
NZ : 2 1 1 2
AUS : 3 2 1 4
SL : 2 0 2 0
BAN : 2 0 2 0
பிரிவு பி
TEAM P W L P
RSA : 2 2 0 4
ENG : 3 2 1 4
PAK : 2 1 1 2
WI : 2 1 1 0
THAI : 3 0 3 0