பேஸ்புக் ஆப்: அன்இன்ஸ்டால் செய்தாலும் தப்ப முடியாது
ஏற்கனவே பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை மூன்றாம் பார்ட்டியிடம் விற்றதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு வந்தது. இதற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
2018-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி பேஸ்புக் ஒரு மாதத்திற்கு 2.32 பில்லியன் வாடிக்கையான பயனாளர்களைக் கொண்ட ஒரு சமூக வலைத்தளமாகும்.
இதில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவ்வப்போது தேவையற்ற சர்சைகளிலும் சிக்கிக்கொள்கிறது.
பேஸ்புக் குறித்து வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் கூறியதாவது,
பொதுவாக நம்மில் பலபேர் உடல்நிலை, உடற்பயிற்சி, மாதவிடாய், கர்ப்பம் தொடர்பான செயலிகளைப் பயன்படுத்துவோம்.
அதில் தங்கள் மாதவிடாய் நாட்கள் பற்றி பெண்கள் குறித்து வைப்பது வழக்கம். அந்த செயலி ரிமைண்டர் மூலம் அவர்களுக்கு மாதவிடாய் நாட்களை நினைவு படுத்தும்.
இதேபோல் கர்ப்பம், ஹெல்த் தொடர்பான செயலிகளையும் அதிகமான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களுக்கு பயன்படுத்தும் செயலிகளை கண்காணிப்பது என்பது தவறான செயலாகும்.
இவ்வாறு நாம் பயன்படுத்தும் அனைத்து செயலிகளின் தகவல்களையும் பேஸ்புக் நிறுவனம் கண்காணித்து வருகின்றது என்பது தெரிய வந்துள்ளது.
நாம் பேஸ்புக் யூசர் இல்லாவிட்டாலும் நாம் என்ன சாப்பிட்டோம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் அனைத்தையும் கண்காணித்து வருகின்றது. .
பேஸ்புக் நிறுவனம் தங்களுடைய வருமானத்திற்காக ஒவ்வொரு தனி நபரின் செயல்களையும் கண்காணிக்கின்றதாம்.
மூன்றாம் பார்ட்டி செயலிகளில் ஆஃப் ஈவெண்ட்ஸ் (app events) என்ற கருவியை செயல்படுத்துகின்றனர்.
இந்த ஆப் ஈவெண்ட்ஸ் கருவி பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பர அல்கொரிதமுடன் (advertisement algorithm) இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் இணையத்தில் நம்முடைய செயலுக்கு ஏற்றவாறு விளம்பரங்களை நமக்கு பேஸ்புக் மூலம் காட்டப்படுகிறது.
மொபைல் விளம்பரங்களைக் செயலாக்குவதற்கு இதுவே சிறந்த வழி என்றும் பேஸ்புக் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்காக ஒவ்வொரு தனி நபரும் அவர்கள் இணையத் தொடர்பில் இருக்கும் பொழுது கண்காணிப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பேஸ்புக் நிறுவனம் கருத்து பின்வருமாறு, இவ்வாறு மூன்றாம் பார்ட்டி செயலிகள் தகவல்களை அனுப்புவதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று பேஸ்புக் நிறுவனம் கையை விரித்துள்ளது.