Home நிகழ்வுகள் இந்தியா ஜாலியன்வாலா பாக் 100 ஆண்டுகள் நிறைவு; 13000 கிராமங்கள் மண் மூலம் நினைவகம்

ஜாலியன்வாலா பாக் 100 ஆண்டுகள் நிறைவு; 13000 கிராமங்கள் மண் மூலம் நினைவகம்

486
0
ஜாலியன்வாலா பாக்

ஜாலியன்வாலா பாக் 100 ஆண்டுகள் நிறைவு; 13000 கிராமங்கள் மண் மூலம் நினைவகம்

1919-ம் வருடம் ஏப்ரல் 13-ம் தேதி சீக்கிய புத்தாண்டு மற்றும் அறுவடைத் திருநாள். இதைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் ஜாலியன்வாலா பாக் என்ற பகுதியில் கூடினர்.

அப்போது, ஆங்கிலேய அரசுக்கு எதிராக அவர்கள் போராடுகின்றனர் என முட்டாள்தனமாக முடிவு செய்த கர்னல் ரெஜினால்டு டயர் என்பவர் அந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தினார்.

1000-ற்கும் மேற்பட்ட குண்டுகள் சீறிப்பாய்ந்தன. பாதிப்பேர் குண்டு துளைத்து உயிரிழந்தனர். மீதிப்பேர் உயிர் பயத்தில் அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்தனர்.

பல்லாயிரக்கணக்கானோர் ஒருவர் மீது ஒருவர் குதித்ததில் காயம் பட்டு, மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்தப் படுகொலை அரங்கேறி 100 ஆண்டுகள் நிறைவடைவந்துள்ளது. இதற்காக அமிர்தரசரஸ் பகுதியில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்காக 13,000 கிராமங்களில் இருந்து மண் எடுத்து வந்து நினைவுத் தூண் கட்டப்பட உள்ளது. ஏப்ரல் 13-ம் தேதிக்குள் பணிகளை முடித்து நினைவிடத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Previous articleபேஸ்புக் ஆப்: அன்இன்ஸ்டால் செய்தாலும் தப்ப முடியாது
Next articleஏற்காடு மலையடிவாரம் காப்புக்காட்டில் காட்டுத்தீ
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here