அதிக கதிர்வீச்சை வெளியிடும் பட்டியலில் ஐபோன்
அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுமே அதிகமான கதிர்வீச்சை வெளியேற்றுகின்றன.
16 மொபைல்கள் கொண்ட பட்டியலில் சியோமி மற்றும் பிளஸ் ஒன் ஃபிராண்ட் மொபைல்கள் 8 இடம் பெற்றுள்ளன.
குறைந்த கதிர்வீச்சை வெளியிடும் மொபைல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 முதலிடத்தில் இருக்கிறது.
ஐ ஃபோன் 7, 8 மற்றும் கூகிள் பிக்சல் மொபைல் மாடல்களும் அதிக கதிர்வீச்சை வெளியிடும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
கதிர்வீச்சை வெளியிடும் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சியோமி எம்ஐ எஒன் 1.75 வாட்ஸ் பெர் கிலோகிராம் அளவில் கதிர்வீச்சை வெளியிடுகிறது.
இரண்டாம் இடத்தில் உள்ள ஒன்பிளஸ் 5டி, 1.68 வாட்ஸ் பெர் கிலோகிராம் என்ற அளவில் கதிர்வீச்சை வெளியிடுகிறது.
குறைந்த கதிர்வீச்சில் சாம்சங், மோட்டரோலா மற்றும் ஜெட்டிஇ ஃபிரண்ட் ஸ்மார்ட் ஃபோன்களே அதிகமாக உள்ளன.
உலக அளவில் பாதுகாப்பான கதிர்வீச்சு என்று எதுவும் இல்லை. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புளு ஏஞ்சல் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 0.60 வாட்ஸ் பெர் கிலோகிராமுக்கு குறைவான கதிர்வீச்சை வெளியிடும் ஸ்மார்ட்ஃபோன்களை மட்டுமே அனுமதிக்கிறது.