Home நிகழ்வுகள் இந்தியா மோடிக்கு எதிராக ஆடையின்றி கறுப்புக்கொடி போராட்டம்

மோடிக்கு எதிராக ஆடையின்றி கறுப்புக்கொடி போராட்டம்

435
0

மோடிக்கு எதிராக ஆடையின்றி கறுப்புக்கொடி போராட்டம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இன்று அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதோடு சில நலத்திட்டங்களையும் துவங்கிவைத்தார் மோடி.

பிரச்சார மேடையில் தோன்றிப் பேசிய மோடி, அருணாச்சல பிரதேசம் சூரிய உதயத்தின் நிலம் என்பதால் இது நமக்கு உறுதியை கொடுக்கிறது எனப்பேசினார்.

முந்தைய அரசு இந்த மாநிலத்தை முற்றிலும் புறக்கணித்துள்ளது. சரியான திட்டங்கள் இல்லை. குறிப்பாக மின்சார உற்பத்தி திட்டம் இல்லை.

பாஜக அரசு 13 ஆயிரம் கோடி செலவில், போக்குவரத்து துறை மற்றும் மருத்துவத் துறையை சீரமைக்க உள்ளது.

பாஜக ஆட்சியில் அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு விமான நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளது. ரயிவே துறை மிகவும் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு மோடி கூட்டத்தில் பேசினார்.

அவர் மேடையில் பேசும் முன்பு அவருக்கு எதிராக ஆடையின்றி கருப்புக்கொடி காட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பலர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்புகளைக் காட்டினர்.

மோடி கடந்த தேர்தலில் பிரதம வேட்பாளராக போட்டியிட்டபோது, சில நடிகைகள் கவர்ச்சியாக உடையில்லாமல் மோடிக்கு ஆதரவாக புகைப்படங்களை வெளியிட்டனர்.

ஆனால், இந்த முறை மோடிக்கு எதிராக ஆடையின்றி போராட்டம் நடத்துகின்றனர். கறுப்புக்கொடி காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆன்லைன் ஷாப்பிங் மோசடி; 82 ஆயிரம் அபேஷ்!
Next articleஅதிக கதிர்வீச்சை வெளியிடும் பட்டியலில் ஐபோன்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here