ஆன்லைன் ஷாப்பிங் மோசடி; 82 ஆயிரம் அபேஷ்!
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கப் பெத் என்ற பகுதியைச் சேர்ந்த பிரக்சானா என்பவர் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் ஒன்றின் மூலம் 107 ரூபாய்க்கு மோதிரம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
அந்த மோதிரம் அவருடைய விரலில் சரியாகப் பொருந்தவில்லை. எனவே அதை திரும்ப பெற்றுக்கொண்டு ரீபன்ட் கேட்டுள்ளார்.
அந்த இணையதளத்தை சேர்ந்தவர் திரும்ப பணம் அனுப்ப ஏடிஎம் கார்ட் குறித்த தகவல்களை கேட்டுள்ளார். மேலும் அப்பெண்ணிடம் நைசாகப்பேசி ஓடிபி எண்ணையும் வாங்கியுள்ளார்.
அவருடைய கார்ட் மட்டுமல்லாமல் அவருடைய தந்தையின் கார்டு பற்றிய தகவல்களையும் கொடுத்துள்ளார் அந்த அப்பாவி இளம்பெண்.
இருவரது வாங்கி கணக்கில் இருந்தும் மொத்தம் 82,000 ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே அவர்கள் ஏமாற்றப்படத்தை உணர்ந்துள்ளனர்.
அதன்பிறகே மோசடி பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்ததில் அந்த பணம் டெல்லியில் உள்ள வங்கிக் கணக்கிற்கு சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.