ஆப்பிள் ஸ்ட்ரீமிங் சேவையுடன் இணைய மறுத்த நெட்ப்லிக்ஸ் நிறுவனம்
தற்போதைய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவையில் கை ஓங்குகிற நெட்ப்லிக்ஸ் நிறுவனத்தின் சேவையும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவையும் இணையப் போவதில்லை என நெட்ப்லிக்ஸ் சிஇஓ ரீட் ஹஸ்டிங்க்ஸ் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறோம். அதே நேரத்தில் எங்கள் சேவை ஒரு போதிலும் ஆப்பிளுடன் இணையாது எனவும் ரீட் கூறியுள்ளார்.
மிகப்பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைக்கு வருவது எங்களுக்கு மிகவும் போட்டியாக இருக்கும் அதுவே எங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள உதவும் என நம்புகிறோம்.
வருகிற மார்ச் 25ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஸ்ட்ரீமிங் சேவையை தொடங்க இருக்கிறது. ஒரு பக்கம் ஆப்பிள் நிறுவனங்களின் ஃபோன் விற்பனை சரியத் தொடங்கியுள்ளது.
அடுத்தடுத்த புதிய சேவை மற்றும் திட்டங்களை கொண்டு வந்தால் மட்டுமே வண்டி ஓட்ட முடியும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு தெரிந்துள்ளது.