Home Latest News Tamil திவாலானது அம்பானியின் நிறுவனம்; எல்லோரும் சிம் கார்டை மாற்றத் தயாராகுங்க!

திவாலானது அம்பானியின் நிறுவனம்; எல்லோரும் சிம் கார்டை மாற்றத் தயாராகுங்க!

1898
0
திவாலானது அம்பானியின் நிறுவனம்

திவாலானது அம்பானியின் நிறுவனம்; எல்லோரும் சிம் கார்டை மாற்றத் தயாராகுங்க!

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப்பின் இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன.

ஏர்செல் நிறுவனம் கடன் தொல்லையால் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனமும் அம்பானியுடையதே. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவாலானதாக  அனில் அம்பானி அறிவித்துவிட்டார்.

ரிலையன்ஸ் சொத்தை விற்றாவது கடனை அடைக்க முயற்சித்து உள்ளார். ஆனால் சொத்தை விற்க முடியவில்லை என்பதால், திவால் என அறிவித்துள்ளார்.

அண்ணனே, தம்பியின் நிறுவனத்தை மூடக் காரணமாக அமைந்துவிட்டார். 7 பில்லியன் டாலர்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ளார்.

12 மாதங்களில் 40 கடனாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. தற்பொழுது முற்றிலுமாக திவாலாகிவிட்டது.

கடந்த சில மாதங்களாகவே ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக  ஜியோவுக்கு  மாறினார்கள்.

எஞ்சி உள்ளவர்கள் இன்னும் ரிலையன்ஸ் சிம் வைத்திருந்தால் வேறு நெட்வொர்க்குக்கு உடனே மாறிவிடுங்கள்.

முகேஷ் அம்பானி அடுத்து பைபர் இன்டர்நெட், டிடிஎச், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றைத் துவங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here