Teaser Mistake 2 0 | 2 பாயிண்ட் ஓ டீசரில் உள்ள குறைகள் ஓர் அலசல்.
ஷங்கர் படம் என்றாலே கிராபிக்ஸ் மிரட்டலுக்கு பஞ்சம் இருக்காது. அதேவேளையில் கிராபிக்ஸ் பணிகள் அரைகுறையாக உருவாக்கப்பட்ட காட்சிகள் அப்பட்டமாக தெரியும்.
2 பாயிண்ட் ஓ படத்தின் டீசரிலும் சில குறைகள் அப்பட்டமாக தெரிகின்றது. சிறுவர்கள் கூட எளிமையில் கண்டுபிடிக்கும் அளவிற்கு பெரிய பெரிய ஓட்டைகள் டீசரில் உள்ளன.
செல்போன் வெளிச்சம்
ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் நபரை சுற்றி திடீரென செல்போன்கள் சூழ்ந்துகொள்ளும். அவரை முன்பக்கம் காட்டும்போது அறை இருளில் இருக்கும். பின்பக்கம் காட்டும்போது வெளிச்சமாக இருக்கும். இது டீசரில் உள்ள மிகப்பெரிய ஓட்டை.
சிட்டி லோகோ
சிட்டி ரோபோவின் வலது கையில், சிட்டி என்ற லோகோ இடம் பெற்று இருக்கும். கட்டிடத்திற்குள் பறக்கும் காட்சியில், வலது கையில் அந்த லோகோ இருக்காது. இவை இரண்டும் டீசரில் உள்ள மிகப்பெரிய குறை.
ஒரு டீசரிலேயே மிகப்பெரிய குறைகள் உள்ளது. இது கிராபிக்ஸ் பணியின்போது எளிதாக கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒன்றே. அதைக்கூட கவனிக்காமல் டீசரை வெளியிட்டுள்ளனர்.
2.ஓ டீசர் உருவாக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் குறைகளுடனே ரிலீஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரில் பறக்கும் செல்போன்:
காரில் செல்போனில் ஒருவர் பேசிக்கொண்டு இருப்பார். அவருடைய செல்போன் மட்டும் பறக்கும். அவர் பின்னால் பைக்கில் உள்ளவர்கள் செல்போன்கள் வைத்திருக்கவில்லையா? அல்லது அவர்களுடைய பாக்கெட்டில் இருப்பதால் மேக்னடிக் பவர் வேலை செய்யவில்லையா எனத்தெரியவில்லை.
தேவையில்லாத செல்பி:
கட்டிடத்தின் கீழ் இருக்கும் அனைவரும் காரணமே இல்லாமல் செல்பி எடுத்துக்கொண்டு இருப்பார்கள். செல்பி எடுப்பது என்பது வாடிக்கையே. அதற்காக கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லோரும் செல்பி எடுப்பது என்பது அரிதான ஒன்று.
பருந்தின் இறக்கை
பருந்தின் இறக்கை ஆடிக்கொண்டே இருக்கும். ஆனால் கட்டிடத்தின் உள்ளே இருந்து பார்க்கும்போது, பறப்பது போன்று இருக்காது. இறக்கைகள் அசையாமல் கிராபிக்ஸ் மூலம் இயங்குகின்றது என்பது அப்பட்டமாக தெரியும்.
500 கோடி செலவு
கிராபிக்ஸ் படம் என்றாலே குறைகள் இருப்பது சகஜம் தான். ஆனால் டீசரிலேயே இத்தனை குறைகள் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. கிராபிக்ஸ் பணிக்காக 500 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஷங்கர், கிராபிக்ஸ் பணிகளை கவனமுடன் கையாளும் தொழில்நுட்ப இயக்குனர்களை உடன்வைத்து கொள்வதே அவருடைய படங்களுக்கு நன்மை.