Home Latest News Tamil உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை

உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை

676
0
உலகின் மிகநீளமான 3டி பாலம் நீளமான பாலம் 3D கட்டுமானம் World Longest 3D Bridge Tamil

உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை. நீளமான பாலம் 3D கட்டுமானம். World Longest 3D Bridge Tamil.

சீனா நாட்டின் சாங்காய் நகரத்தில் உலகின் மிக நீளமான 3டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் பெடெஸ்ற்றியான்  ஆகும்.

சைங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வெய்குவோ இந்தப் பாலத்தை டிசைன் செய்தார்.

இந்த 3டி பாலம் 26.3மீட்டர் நீளமும் 3.6 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பழமையான சீன பாலம் ஆஞ்சியின் (Anji) தழுவலிலயே இந்த கான்கிரீட் 3டி பாலம் கட்டப்பட்டதாக கூறுகின்றனர்.

3D பாலம் என்றால் என்ன?

3டி பாலம் என்பது 3D பிரிண்டர்களை கொண்டு கட்டப்படுவதாகும். மொத்த பாலத்தையும் பிரிண்ட் செய்து எந்த இடத்தில் பொருத்த வேண்டுமோ அங்கு பொருத்தி விடுவார்கள்.

கம்பிகட்டி பில்லர் வைத்து, ஜல்லிகளை கொண்டு காங்கிரட் செய்வது போன்று இருக்காது. இது முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பம்.

பெடெஸ்ற்றியான்  பாலம்

3டி பெடெஸ்ற்றியான்  பாலமானது 44 ஹாலோவ்டு 3டி பிரிண்டட் கான்கிரீட் கற்களால் (hollowed-out 3D printed concrete blocks) அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த பாலமானது திறக்கப்பட்டது. 100க்கும் மேற்ப்பட்டோர் இதில் நடக்க அனுமதித்து பரிசோதனை செய்து பார்த்தனர்.

இரண்டு ரோபோட் ஆர்ம்களால் பெடெஸ்ற்றியான்  பாலத்தின் கான்கிரீட் அமைப்புகள் டிசைன் செய்யப்பட்டது. குறைந்த செலவில் அமைக்கப்பட்ட பாலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருட்களின் இடமாற்றதைக் கணிப்பதற்காக பெடெஸ்ற்றியான் பாலத்தில் சென்சார் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சென்சாரின் உதவியால் வருங்காலங்களில் 3டி பாலத்தை இன்னும் சிறப்பாக அமைக்கமுடியும் என்று பேராசிரியர் வெய்குவோ தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரைகளையும் கொஞ்சம் படியுங்களேன்

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்

உலகின் நீளமான கடற்கரைகள் டாப் 10 பட்டியல் 

உலகின் நீளமான மலை தொடர்ச்சி – டாப் 10 பட்டியல்
இந்தியாவின் எல்லைகள் பற்றி தெரியுமா? 
உலகின் மிக உயரமான மலைகள் டாப் 10 பட்டியல்
Previous articleநினைத்ததை அடைய ஈர்ப்பு விதி அவசியம்!
Next articleஜெயலலிதா குற்றவாளியா? – குமாரசாமிக்கு அடுத்து நச் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here