தாக்குதலில் அரசியல் சதி உள்ளதா?: சி.ஆர்.பி.எப் செய்தி தொடர்பாளர் அதிர்ச்சி தகவல்!
ஜம்மு-காஷ்மீரில் 78 வாகனங்களில், 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஸ்ரீநகரை நோக்கி அதிவேகமாகக் சென்றனர்.
முகாமை அடைய 30 கிலோமீட்டர் இருந்தபோது, 350 கிலோ எடையுடன் வெடிபொருட்களை ஏற்றி வந்த கார் ஒன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதியது.
புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதுவரை இந்த தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த இடத்தில் ஏகப்பட்ட செக்போஸ்டுகள் உள்ளன. அதையும் மீறி ஒருவர் 350 கிலோ வெடிமருந்துடன் உள்ளே நுழைந்துள்ளார்.
இதில் எதோ சதி உள்ளது. இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என சி.ஆர்.பி.எப். ஆஷிஸ் குமார் ஜா கூறியுள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தில் அதிக அளவு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதியில், இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
மேலும், சில இடங்களில் இணைய வேகம் 2ஜி-யாக குறைக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூகவலைதளங்களில் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.