296 சிக்ஸர் 4000 ரன்கள்; மரண காட்டு காட்டிய கெயில்
வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு விளையாடும்போது கூட மந்தமாகவே விளையாடுவார்கள்.
ஆனால் ஐ.பி.எல். போட்டி என்றால் மரணக்காட்டுக் காட்டுவார்கள். அனைத்து வீரர்களும் ஆல்ரவுண்டர்களாக வேறு இருப்பார்கள்.
சமீபத்தில் தான் சுரேஷ் ரெய்னா 5000 ரன்களைக் கடந்த முதல் ஐபிஎல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால் 173 போட்டிகளில் இந்தச் சாதனையைப் படைத்தார்.
நேற்று நடந்த பஞ்சாப் ராஜஸ்தான் இடையே நடந்த போட்டியில் கிறிஸ் கெயில் 46 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார்.
20 ஓவர்களுக்கு பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 184 ரன்கள் குவித்தது. அதன்பின்பு ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 170 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஹைலைட்ஸ் வீடியோ
கிறிஸ் கெயில் சாதனைத் துளிகள்
கெயில் 112 போட்டிகளில் விளையாடி 4000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 4000 ரன்களைக் கடந்த இரண்டாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
கெயில் 66 பந்துகளில் 175 ரன்கள் அடித்ததே ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராக இன்னும் உள்ளது.
112 போட்டிகளில் இதுவரை 296 சிக்சர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். இன்னும் 4 சிக்ஸர்கள் அடித்தால் 300 சிக்ஸர்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.
கெயில் 2013-ல் ஒரு இன்னிங்சில் 17 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்றுவரை அதை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
2013-ல் 30 பந்துகளில் 100 ரன்கள் அடித்துள்ளார். குறைந்த பந்துகளில் 100 ரன்கள் அடித்த சாதனையும் இன்னும் முறியடிக்கப்படவில்லை.
இதுவரை 6 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 20 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்றும் முதலிடத்தில் உள்ளார்.
இப்படி கெயிலின் முறியடிக்கப்படாத சாதனைகள் ஏராளம்.