என்.ஜி.கே ரிலீஸ்: ஆர்ப்பரிக்கும் சூர்யா-செல்வராகவன் ரசிகர்கள்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு செல்வராகவன் இயக்கிய படம் என்.ஜி.கே. சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளார்.
நந்த கோபாலன் குமரன் என்ற பெயரின் சுருக்கமே என்.ஜி.கே. 2016-ஆம் ஆண்டே படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இதனால் சூர்யா-செல்வராகவன் ரசிகர்கள் என்.ஜி.கே. படத்தின் அப்டேட் பற்றி சொல்லுங்கள் என செல்வராகவனை ரசிகர்கள் நச்சரித்துக்கொண்டே இருந்தனர்.
அவர்களைக் குஷிப்படுத்தும் விதமாக சில வாரங்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.
ட்ரைலரில் அரசியல், விவசாயம், அடிதடி என விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லாத அளவிற்குக் காட்சிகள் இருந்தது.
இந்நிலையில் இப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. எனவே படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
என்.ஜி.கே., மே மாதம் 31-ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.