ஸ்பிரிங் ஈக்குவினாக்ஸ் (Spring Equinox): இன்றைய கூகிள் டூடுல்

spring equinox

ஸ்பிரிங் ஈக்குவினாக்ஸ் (Spring Equinox): இன்றைய கூகிள் டூடுல்

சூரியன் பூமியைச் சுற்றி வரும்பொழுது அதன் நிலநடுக்கோடு அல்லது பூமத்திய ரேகையையின் மீது செங்குத்தாக அதன் ஒளி விழும் இதுவே வெர்னல் ஈக்குவினாக்ஸ் ஆகும்.

வெர்னல் ஈக்குவினாக்ஸ் என்பது இரவும் பகலும் சமமான காலஅளவில் இருப்பதை குறிக்கும். அதாவது, பகல் 12 மணி நேரம், இரவும் 12 மணி நேரம் என சமஅளவில் இருக்கும். ஆனால் மிகத்துல்லியமானது அல்ல.

பழங்காலத்தில், மார்ச் மாதத்தில் நிகழும் ‘ஸ்பிரிங் ஈக்குவினாக்ஸ்’ நாளே புத்தாண்டாக கொண்டாடப்பட்டுள்ளது.

இது வருடத்தில் இருமுறை நடக்கும் மார்ச் மாதத்தில் வருவது ஸ்பிரிங் ஈக்குவினாக்ஸ் என்றும் செப்டெம்பர் மாதத்தில்  வருவது ஃபால் ஈக்குவினாக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

மார்ச் மாதம் 20 அல்லது 21 ஆகிய தேதிகளில் ஸ்பிரிங் ஈக்குவினாக்ஸ் வரலாம்.  செப்டெம்பர் 22 ஆம்  தேதிகளில் ஃபால் ஈக்குவினாக்ஸ் வரலாம்.

அதாவது ஒன்று வசந்த காலத்திலும்(மார்ச்) மற்றொன்று இலையுதிர் காலத்திலும்(செப்டெம்பர்) ஏற்படும்.