Home சினிமா 1983 ஆண்டிற்கு சென்று இந்தியா வென்ற முதல் உலகக்கோப்பை காண ரெடியா?

1983 ஆண்டிற்கு சென்று இந்தியா வென்ற முதல் உலகக்கோப்பை காண ரெடியா?

இந்தியா பந்து வீசுவதற்கு முன்னர் “ நாம் இழப்பதற்கு எதுவுமே இல்லை , நம் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதே மிகப் பெரிய விஷயம். நாம் அச்சப்படவே தேவை இல்லை. அவர்களுக்கு நாம் எந்த ஒரு ரன்னையும் எளிதில் விட்டுக்குடுக்க வேண்டாம் . முடிந்தளவு போராடுவோம் “ என்று பேசினாராம் கபில் தேவ்

412
0

வருகிறது  83’! இந்தியாவின் முதல் உலகக்கோப்பை வென்ற தருணத்தை ( 1983 cricket world cup ) மீண்டும் காணத்  தயாரா…

1983 ஆண்டிற்கு சென்று இந்தியா வென்ற முதல் உலகக்கோப்பை காண ரெடியா? கபில்தேவ் தலைமையில் 1983-ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றது. இந்த நிகழ்வை தத்ரூபமாக செதுக்கும் படமே “83”. 1983 cricket world cup.

வருகிறது 83’ இந்திப்படம்!   நம் நாட்டில் கிரிக்கெட் பிடிக்காதவர் மிகவும் கம்மி . அதிலும் இப்போது “பயோ பிக்சர்” எனப்படும் வாழ்க்கை வரலாற்றுப்படங்கள்  மிகப் பிரபலமடைந்து வருகின்றது. 1983 cricket world cup.

அந்த வரிசையில் இந்தப்படம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. ரன்வீர் சிங் தான் கபில் தேவின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறார், அதாவது கபில்தேவாக நடித்து வருகிறார்.  

அதிக மன வலிமை கொண்டவர் கபில் தேவ்!

கபில் தேவ் உண்மையாகவே ஒரு வித்தியாசமான வீரர். மித வேகப்பந்துவீச்சாளர் என்றாலும் மிகத் துல்லியமாகவே பந்து வீசுவார். அவர் இதுவரை நோ பால் எனப்படும் கிரீஸ் கோட்டைத் தாண்டி வீசப்படும் உபரிப்பந்தை ஒரு முறைக்கூட வீசியது இல்லை.

அவர் விளையாடிய நாட்களில் ஒருமுறைக் கூட ஓய்வு எடுத்தது  கிடையாது. அதிக ஆக்குரோஷம், ஆர்ப்பாட்டம் எதுவும் கிடையாது. ஆனால் மிக உறுதியானவர். அதிக மன வலிமை கொண்டவர்.

இழப்பதற்கு எதுவுமே இல்லை…

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெறும் 183 ரன்களே எடுத்து ஆட்டம் இழந்தது.  அன்றைய  காலகட்டத்தில் மிகவும் வலிமையான அணியான மேற்கு இந்தியத் தீவுகள் அறுபது ஓவர்களில் அந்த இலக்கை மிகவும் எளிதாக எட்டிவிடும் என்றே பலரும் எண்ணினர் .

இந்தியா பந்து வீசுவதற்கு முன்னர் “நாம் இழப்பதற்கு எதுவுமே இல்லை, நம் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதே மிகப் பெரிய விஷயம்.

நாம் அச்சப்படவே தேவை இல்லை. அவர்களுக்கு நாம் எந்த ஒரு ரன்னையும் எளிதில் விட்டுக்குடுக்க வேண்டாம். முடிந்தளவு போராடுவோம் “ என்று பேசினாராம் .

அன்று இந்திய அணியின் களப்பணி மிகவும் அபாரமாக இருந்தது. கபில் தேவ் யாருமே பிடிக்க முடியாது என்று நினைக்கப்பட்ட ஒரு கேட்சை அபாரமாக ஓடிச்சென்று பிடித்து அசத்தினார் .

அன்று அவரின் அறிவுரைப்படி நடந்த இந்திய அணியின் அபாரச் செயல்பாட்டால்  இங்கிலாந்தில் நடைப்பெற்ற உலகக் கோப்பையை 1983-ஆம் ஆண்டு வென்று வரலாறு படைத்தது.

1983 cricket world cup நம்மில் பலர் காண முடியாமல் போன அந்த சிலிர்ப்பூட்டும் தருணத்தை நமக்கு படமாக தரவிருக்கின்றனர்.

கபீர் கான் இயக்கி, பிரிதம் இசையமைக்க, ரிலையன்ஸ் நிறுவனம் விநியோகஸ்தராக பங்குபெற, மிகப் பிரமாண்டமாகத் தயாராகி வருகின்றது.

சிறிது நாட்கள் முன்னர் தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான்களின் வழி காட்டுதலின் படி பயிற்சிகள் துவங்கியுள்ளது!

அன்றைய இந்திய (1983 cricket world cup) அணியின் துவக்க ஆட்டக்காரர், அஞ்சா நெஞ்சர், அதிரடி ஆட்டக்காரர் க்ரிஷ் ஸ்ரீகாந்த் அவர்கள்.

அவரின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பது நம் “கோ” புகழ் ஜீவா என்பது கூடுதல் தகவல். காத்திருப்போம்….

சா.ரா 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here