Master Audio Launch From March 15; மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், #2DaystogoForMasterAudioLaunch என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக வரும் 15 ஆம் தேதி மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch From March 15) நடக்க இருக்கிறது.
மாஸ்டர் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ, மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வாத்தி கம்மிங் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். வாத்தி கம்மிங் பாடல் சேலஞ்ச் புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறது.
ஆம், வாத்திஸ்டெப்பு சேலஞ்ச் என்ற ஹேஷ்டேக்கில் வைரலாகி வருகிறது. சி
னிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் #VaathiStepu Challenge ஹேஷ்டேக் மூலம் டான்ஸ் வீடியோவை பதிவிட்டு பலரும் மாஸ்டர் படத்தின் மீது தங்களுக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. சன் டிவி நிறுவனம் இதனை தங்களது சேனலில் நேரலை செய்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால், மாஸ்டர் இசை வெளியீடு எங்கு நடக்கிறது என்பது குறித்து அறிவிப்பு வரவில்லை.
இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் மாஸ்டர் அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஒன்றில் மாஸ்டர் இசை வெளியீடு (Master Invitation) நடக்க இருப்பது போன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதுதான் அதிகாரப்பூர்வ அழைப்பிதழா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.
மேலும், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஏற்பட்ட டிக்கெட் கலர் ஜெராக்ஸ் பிரச்சனையை தவிர்ப்பதற்காக ஸ்மார்ட் கார்டு மூலமாக அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், டுவிட்டரில் #2DaystogoForMasterAudioLaunch என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
அதோடு, ஹலோ ஆப்பில் மாஸ்டர் ஆடியோ 2நாட்களில் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.