Home சினிமா கோலிவுட் ரசிகர்கள் அன்புத்தொல்லை: நின்றார் அஜித்… பறந்தார் விஜய்…

ரசிகர்கள் அன்புத்தொல்லை: நின்றார் அஜித்… பறந்தார் விஜய்…

1264
0
ரசிகர்கள் அன்புத்தொல்லை

ரசிகர்கள் அன்புத்தொல்லை: நின்றார் அஜித்… பறந்தார் விஜய்…

சமீபத்தில் விஜய் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அவருடைய காரை ரசிகர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

இதனால் கார் ட்ரைவர் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார். அப்பொழுதும் ரசிகர் விடவில்லை. பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தி கூச்சலுடனே சென்றுள்ளனர்.

அதற்கு மேல் பொறுமை இழந்த விஜய், ரசிகர்களின் ஆர்வமிகுதியால் ஏதேனும் விபத்து அரங்கேறிவிடப்போகிறது என கார் கண்ணாடியைத் திறந்தார்.

ரசிகர்களை அங்கிருந்து போகச்சொல்லி சைகை காட்டினர். அப்பொழுதும் ரசிகர்கள் விடுவதாய் இல்லை.

இதேபோன்று அஜித் ரசிகர்களும் சில நேரங்களில் அஜித்தின் காரை விரட்டி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

ஒருநாள் இரவு நேரத்தில் ரசிகர் ஒருவர் அஜித்தின் காரைப் பின்தொடர்ந்தார். உடனே கரை நிறுத்திய அஜித் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அவருக்கு அறிவுரை கூறினார்.

அதேபோன்று அஜித் பைக் ரைடு செல்லும்போது சேலம் மாவட்டம் காட்டுக்கொட்டை கிராமம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் திடீரென ஒரு டீக்கடைக்கு விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

உடனே அவருடைய ரசிகர்கள் நீண்ட தூரம் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். அப்போதும் அவர்களுக்கு அஜித் அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.

ரசிகர்களும் நடிகர்களை இப்படி விரட்டுவது நல்லதல்ல?  ஒருவரைப் பார்த்து மேலும் பலர் இதேபோன்று காரைப் பின்தொடர  நேரிடும்.

Previous articleகெத்துக்காட்டிய தேமுதிக; கெஞ்சல் தேமுதிகவாக மாறியுள்ளது
Next articleஜம்மு காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு – வீடியோ
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here