Home நிகழ்வுகள் இந்தியா ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு – வீடியோ

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு – வீடியோ

538
0
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த மாதம் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது.

இந்த அதிர்வலையில் இருந்தே இந்தியா இன்னும் மீளவில்லை. இந்நிலையில் மீண்டும் காஷ்மீர் மாநிலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

ஜம்மு நகரில் உள்ள ஒரு பேருந்தில் மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது போன்றே தகவல்கள் கிடைத்துள்ளது.

இருப்பினும் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உயிர்பலி ஏற்பட்டுள்ளதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வத் தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் இது மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleரசிகர்கள் அன்புத்தொல்லை: நின்றார் அஜித்… பறந்தார் விஜய்…
Next articleஅஜித்தை விளம்பரத்தில் நடிக்க வைக்க ஜான்சி ராணி முயற்சி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here