Home சினிமா கோலிவுட் லிஃப்டுக்குள்ளே கொரோனா: வைரலாகும் கொரோனா வைரஸ் பட டீசர்!

லிஃப்டுக்குள்ளே கொரோனா: வைரலாகும் கொரோனா வைரஸ் பட டீசர்!

275
0
CoronaVirus Movie Teaser

CoronaVirus Movie Teaser; லிஃப்டுக்குள்ளே கொரோனா வைரஸ்: வைரலாகும் கொரோனா பட டீசர்! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை மையப்படுத்தி கொரோனா படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பட டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியது. 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மட்டும் 1637 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், கொரோனா 38 பேரது உயிரை காவு வாங்கியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் என்ற டைட்டிலையும், வைரஸ் தொற்றையும் மையமாக வைத்து படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்தவர் இயக்குநர் முஸ்தபா கேஸ்வாரி. இவர், கடந்த ஜனவரியில், கொரோனா பீதியால் லிஃப்டில் தாக்கப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்தவரின் கதையை மையப்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி கொரோனா டீசர் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போது தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here