இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.எஸ்.ரவிக்குமார். திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு கே.எஸ்.ரவிக்குமார் தனது 62-ம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் 1958-ம் ஆண்டு மே மதம் 30-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள வெங்கனூரில் பிறந்தவர். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
பிரபல இயக்குனர் விக்கரமானிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.எஸ்.ரவிக்குமார் 1990-ல் ரகுமான் நடிப்பில் புரியாத புதிர் திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார்.
அதன் பின்னர் சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, புருஷ லட்சணம், அவ்வை ஷண்முகி, நட்புக்காக, சுயம்வரம், படையப்பா, பாட்டாளி, பிஸ்தா, மின்சாரக்கண்ணா, சமுத்திரம், பஞ்சதந்திரம், தெனாலி, வில்லன்,
ஆதவன், தசாவதாரம், மன்மதன் அம்பு, லிங்கா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய திரைப்படடங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
2000-ல் வெளியான தெனாலி திரைப்படத்தை தயாரித்தார். 2014-ம் ஆண்டு சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார்.
இவர் இயக்கிய நாட்டாமை, நட்புக்காக, படையப்பா, தசாவதாரம் முதலிய திரைப்படங்கள் இவருக்கு விருதுகளை பெற்று தந்துள்ளன.
சிறந்த இயக்குனராக தனது திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.