Home சினிமா ஹாலிவுட் சினிமா கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 3 ரீவைண்ட்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 3 ரீவைண்ட்

429
0

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 3 ரீவைண்ட்

இரண்டாம் சீஸனின் இறுதியில் ஒயிட் வால்கரின் வருகையுடன் முடிந்தது. மூன்றாம் சீஸன் நைட்ஸ் வாட்ச்சின் பயணத்தில் ஆரம்பிக்கும்.

ஜான் ஸ்னோ-இக்ரீட் இடையேயான காதல்

நைட்ஸ் வாட்ச்சிடமிருந்து பிரிந்து, ஒயில்டுலிங்ஸின் இருப்பிடத்தைப் பார்க்கும் ஜான் ஸ்நோ, அவர்களது தலைவனான மான்ஸி ரைடரைப் பார்த்து நட்பாகிவிடுவார். மான்ஸி ரைடர் என்பவர், ஒயில்டுலிங்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்.

ஆனால், இவர் முன்பு நைட்ஸ் வாட்ச்சிற்காகப் பணியாற்றியிருப்பார். ஜான் ஸ்நோ தன்னுடன் பயணித்த இக்ரிட் என்பவர் மீது காதல் வயப்பட்டிருப்பார்.

ஜோஃப்ரீ-மார்கெரி டைரல் திருமணம்

மார்கேரி டைரல், கிங்ஸ் லேண்டிங்கில் இருக்கும் ஆதரவற்ற மக்களைச் சந்தித்து, தன்னுடைய நல்லெண்ணத்தை அவர்களிடையே பதியவைத்துக்கொண்டிருப்பார். இது ஜோஃப்ரி பராத்தியனுக்கும், செர்சி லானிஸ்டருக்கும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுக்கும்.

ஜோஃப்ரியும், மார்கேரி டைரல்லும் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களது திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டிருப்பார்கள். ஜோஃப்ரிக்கும், மார்கேரியைப் பிடிக்கத் தொடங்கும்.

ப்ரான் ஸ்டார்க், ஹோடோர், ஓஷா ஆகியோரின் பயணம் 

ஜோஜன் ரீடு தனது கனவில் ஜான் ஸ்நோவின் தற்போது இருக்கும் இடத்தைப் பார்த்திருப்பார். ‘நான் ஜான் ஸ்நோவைப் பார்த்தேன். ஆனால், அவர் சுவரின் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்’ என்று ப்ரான் ஸ்டார்க்கிடம் சொல்வார் ஜோஜன்.

ஜேமி லன்னிஸ்டர்-பிரைன் டார்த் கஷ்டமான பயணம்

போல்டன் குடும்பத்திடம் மாட்டியிருக்கும் ஜேமி லானிஸ்டரை ஒருவழியாக அவரது தந்தை டைவின் லானிஸ்டரிடம் அனுப்பி வைக்கும் முடிவுக்கு வந்திருப்பார் ரூஸ் போல்டன்.

ஆனால், ரூஸ் போல்டனின் தளபதி அவருடன் இருந்த பிரையின் டார்த்தைச் சித்ரவதை செய்து கொல்லத் திட்டமிட்டிருப்பார். இதைத் தெரிந்துகொண்ட ஜேமி லானிஸ்டர், பிரையின் டார்த்தைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவார்.

டைரின் லன்னிஸ்டர்-சான்சா ஸ்டார்க் திருமணம் 

‘நான் இளவரசியான பின் என் சகோதரரான சர் லோரஸுக்கு உன்னைத் திருமணம் செய்து வைக்கிறேன்’ என்று மார்கேரி டைரல், சான்ஸா ஸ்டார்க்கிடம் சொல்லியிருப்பார்.

இதை எப்படியோ தெரிந்துகொண்ட டைவின் லானிஸ்டர், டிரியன் லானிஸ்டரை சான்ஸாவுக்குத் திருமணம் செய்துவைக்கத் திட்டமிடுவார். அதுமட்டுமன்றி, சர் லோரஸை செர்சிக்குத் திருமணம் செய்துவைக்கவும் திட்டமிட்டிருப்பார்.

அன்சல்லீடு அடிமைகளை கைப்பற்ற நினைக்கும் டினேரியஸ் 

அஸ்டோபரில் இருக்கும் அன்சல்லீடு மக்களை விடுவித்துத் தன்னோடு சேர்த்துக்கொண்ட பின், டினேரியஸின் குதிரை யூங்காய் எனும் இடத்தை நோக்கிப் பாய்கிறது.

டினேரியஸின் வருகையைத் தெரிந்துகொண்ட அந்த ஊரின் அரசர், அவர் சார்பாக ஒருவரை அனுப்பி தங்கங்களைக் கொடுத்து, ‘எங்களை எதுவும் செய்துவிடாதீர்கள்’ என்று தாழ்மையாகக் கேட்பார்.

‘என்னுடைய நோக்கம் தங்கம் கிடையாது. மக்களின் சுதந்திரம்தான்’ என்று சொல்வார் டினேரியஸ். அதற்கு மறுப்பு சொல்லும் விதமாக அந்த ஊரின் அரசர் மூன்று படைத் தளபதிகளை அனுப்பி மிரட்டல் விடுப்பார்.

அவர்களில் ஒருவரான டாரியோ நஹாரிஸ், டினேரியஸுக்கு ஆதரவாக நிற்க முடிவெடுப்பார். அதற்குச் சான்றாக மிரட்டிய மற்ற இரண்டு வீரர்களையும் கொன்று, டினேரியஸைத் தலை வணங்குவார்.

கொடூரமாக கொலை செய்யப்படும் ஸ்டார்க் குடும்பம்

ராப் ஸ்டார்க் டலிசாவை யாரிடமும் கூறாமல் திருமணம் செய்து விட்டார். இதனால் ஃப்ரே குடும்பத்திடம் கொடுத்த வாக்கை கைப்பற்ற முடியாமல் போய்விடும்.

ஃப்ரே குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கும் வாய்ப்பாக ஒரு சின்ன நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும். அந்த நிகழ்விலேயே எட்ம்யூர் டல்லியின் திருமணத்தை நடத்தவும் வால்டர் ஃப்ரே ஏற்பாடுகளைச் செய்திருப்பார்.

அந்தச் சமயத்தில்தான் ஆர்யா ஸ்டார்க்கை அவரின் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு தனக்கான சன்மானத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருப்பார் சாண்டோர் கிளிகேன்.

சரியாக திருமணம் நடக்கும் சமயத்தில் கூட்டத்தில் இருக்கும் சிலர், ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரையும் குத்திக் கொல்லத் தொடங்குவார்கள்.

மொத்த இடமுமே குழப்பத்தில் காணப்படும் நேரத்தில் ராப் ஸ்டார்கின் மனைவி டலிசா ஸ்டார்க்கின் வயிற்றில் கத்தியை வைத்துக் குத்திக் கிழித்துவிடுவார்கள்.

வால்டர் ஃப்ரேவும் உடந்தை. வால்டர் ஃப்ரேவின் மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து, ராப் ஸ்டார்க்கை விடுவிக்கும்படி அழுவார், கேட்டலின் ஸ்டார்க்.

எதையும் கண்டுகொள்ளாத ரூஸ் போல்டன், ராப் ஸ்டார்க்கை இரக்கமின்றிக் கொன்றுவிடுவார்.  வாழ்க்கையே முடிந்துவிட்ட துயரம் கேட்டலினின் கண்ணில் தெரியும்.

தெம்பின்றி மயக்கமாகும் சமயத்தில் கேட்டலின் ஸ்டார்க்கின் கழுத்தையும் கிழித்துவிடுவார்கள் லானிஸ்டரின் வீரர்கள். இது வரை நாம் பார்த்ததில் இது தான் மிகவும் சோகமான ஒரு நிகழ்வாகும்.

ஒவ்வொரு கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்வையாளர்களும் ஸ்டார்க் குடும்பத்தின் பாயின்ட் ஆஃப் வியூவில்தான் அதைப் பார்த்திருப்போம். அவர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் அது நமக்கானதாகத் தோன்றும்.

 

Previous articleகேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 2 ரீவைண்ட்
Next article#CSKvsKKR சிஎஸ்கேவின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது கேகேஆர்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here