Home விளையாட்டு #CSKvsKKR சிஎஸ்கேவின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது கேகேஆர்

#CSKvsKKR சிஎஸ்கேவின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது கேகேஆர்

711
0
#CSKvsKKR

#CSKvsKKR இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. துவக்க ஆட்டக்காரரான லின் சிஎஸ்கே பவுலர்களை வெளுத்து வாங்கினார்.

அவருடன் களமிறங்கிய சுனில் நரேன் 2 ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்து வந்த ராணா சற்று கை கொடுத்தார். பத்து ஓவர் முடிவில் 79 ரன்கள் எடுத்து கொல்கத்தா சற்று மந்தமான ஸ்கோரையே எட்டியது.

பதினோராவது ஓவரை வீசிய தாஹிர் ராணாவின் விக்கெட்டை கைப்பற்றினார். திடீரென லின் விஸ்வரூபம் எடுக்க ஜடேஜாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் பறக்கவிட்டார்.

மீண்டும் பௌலிங் செய்த தாஹிர் லின் 82, உத்தப்பா 0, ரஸல் 10 என கொல்கத்தாவின் முக்கிய விக்கெட்டுகளை மளமளவென சரித்தார்.

இதனால் ரன் அடிக்க வேண்டிய முக்கிய நேரத்தில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சரிந்தது.

தாகூரின் சுழலில் சிக்கி கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் சின்னாபின்னமாகினர். சீக்கிரமே அவுட் ஆகியதால் பேட்டை ஓங்கி அடித்து கொலைவெறியுடன் வெளியேறினார் ரஸல்.

நீண்ட நேரம் அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய தினேஷ் கார்த்திக் 18, கில் 15 ரன்களில் அவுட் ஆகினார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

கொலைவெறியுடன் பெவிலியன் திரும்பிய ரஸல் பவுலிங்கில் அசத்துவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Previous articleகேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 3 ரீவைண்ட்
Next article#KKRvsCSK ரஸலின் வாலை ஒட்ட நறுக்கி வெற்றி பெற்றது சிஎஸ்கே
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here