Home சினிமா கோலிவுட் எனக்கு கல்யாணமா? யார் சொன்னது? கொந்தளிக்கும் ஹரிஷ் கல்யாண்!

எனக்கு கல்யாணமா? யார் சொன்னது? கொந்தளிக்கும் ஹரிஷ் கல்யாண்!

766
0
Harish Kalyan Marriage Plan

Harish Kalyan Marriage Plan; எனக்கு கல்யாணமா? யார் சொன்னது? கொந்தளிக்கும் பிக் பாஸ் நடிகர்! இன்னும் 2,3 ஆண்டுகளுக்கு தனக்கு திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த ஐடியாவும் இல்லை என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.

விந்து தானத்தை மையப்படுத்தி வெளியான தாராள பிரபு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. பாலிவுட்டில் வந்த விக்கி டோனர் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வந்துள்ளது.

பெண் ரசிகைகள் உள்பட ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

சமீபத்தில் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) கூறியிருப்பதாவது: ரசிகர்களுடன் அன்பை பகிர்ந்து கொள்வதிலும் நான் தாராள மனிதன் தான்.

இருப்பினும், தனக்குத்தானே புகழ்ந்து கொள்ள முடியாது. நன்றாக நடித்துள்ளீர்கள் என்று ரசிகர்கள் கூறும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்றார்.

மேலும், எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த எண்ணமும் இல்லை. இன்னும் 2,3 ஆண்டுகள் கழித்த பிறகு தான் அதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் காரணமாக படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதலிருந்து தொழில் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

பெரும்பாலான இடங்களில் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டுள்ளன. ஆதலால் வெளியில் எங்கும் செல்லாமல், நானும், எனது குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கிறோம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால், உடனே அரசு அறிவித்துள்ள உதவி எண்களை பயன்படுத்த வேண்டும் என்று ஹரிஷ் கல்யாண் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா விழிப்புணர்வு; எது கொடியது – வைரஸா? வதந்தியா?
Next articleஅனிருத் அடுத்த ஏ.ஆர் ரகுமானா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here