ஆசிட் அட்டாக்கில் இருந்து மீண்ட லஷ்மி அகர்வால் பயோபிக்: தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் நடித்து ஆசிட் வீச்சால் பதிக்கப்பட்ட 32 வயதான லஷ்மி அகர்வால் என்ற பெண்மணியின் ‘சபாக்‘ என்ற பயோபிக் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
2005-ம் ஆண்டு, தலைநகர் டெல்லியில் 15 வயது லஷ்மி அகர்வால் என்ற பெண் காதலை ஏற்க மறுத்த ஒரே காரணத்திற்காக ஆசிட் வீச்சால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
இதனால் சிதைந்த முகத்துடன் அவர் பெரும் இன்னல்களுக்கு உள்ளானார். எங்கு சென்றாலும் அவமதிப்பும் அவமானமும் வாய்ப்பு மறுப்புகளும் ஏற்பட்டது.
இருப்பினும் மனம் தளராமல், ‘நான் மட்டும் அல்ல’, என்னைப்போல ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் குரல்கொடுக்க வேண்டும்.
இனி, இந்தக் கொடுமைகள் யாருக்கும் நிகழாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்’ எனக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆசிட் விற்பனை ஒழுங்குமுறைகளை கொண்டுவந்தார்.
தொடர்ந்து `சான்வ் ஃபவுண்டேஷன்’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கி ஆசிட் வீச்சுக்கு எதிராகவும் ஆசிட் வீச்சால் பாதிக்கட்டவர்களுக்குப் பெரிதளவில் உதவி செய்தும் வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. இதில் தீபிகா படுகோன், லஷ்மி அகர்வாலாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியில் ஹிட் அடித்த `ராஸி’ படத்தை இயக்கிய மேக்னா குல்சார்தான் லஷ்மியின் பயோபிக்கையும் இயக்கவிருக்கிறார்.