சல்மான்கான் பாடிய ‘மெயின் தாரே’ பாடல்: நோட்புக் திரைப்படம்
நடிகர் சல்மான் கான் ஹேங்க்ஓவர் , மேய்ன் ஹூன் ஹீரோ டேரா ஆகிய பாடல்களுக்கு பிறகு தற்போது ‘நோட்புக்‘ படத்தில் ஒரு காதல் பாட்டு பாடியுள்ளார்.
நோட்புக் திரைப்படம் நேஷனல் விருது பெற்ற இயக்குனர் நிதின் கக்கர் இயக்கத்திலும் சல்மான்கான் தயாரிப்பிலும் வருகிற மே 29ஆம் தேதி வெளிவர உள்ளது.
இன்று சல்மான் கான் பாடிய பாடலை ரிலீஸ் செய்யப் போவதாக படத்தாயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.மேலும் வெளியாகும் பாடலில் சல்மான்கானும் நடித்துள்ளார் என்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
நோட்புக் திரைப்படத்தில் நடித்துள்ள ஜோடிகளாகிய ஜாகிர் இக்பால், பிரனுதன் பால் ஆகிய இருவருக்கும் இதுவே முதல் திரைப்படம் ஆகும்.
‘மெயின் தாரே’ பாடல் ஒரு ரொமான்டிக் பாடல் மட்டுமல்ல படத்தின் முக்கியமான தருணத்தில் அதாவது ஹீரோ ஹீரோயின் மீதுள்ள காதலை உணரும் தருணத்தில் வரும் பாடலாகும்.
நோட்புக்
முன்னாள் ராணுவ வீரர் காஷ்மீர் மாநிலத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றும் பொழுது அங்கு பணியாற்றிய முன்னாள் ஆசிரியை பயன்படுத்திய நோட் புத்தகத்தை படிக்க தொடங்குகிறார்.
அப்பொழுது அந்த முகம் தெரியாத நபரின் மீது ஏற்படும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் நோட்புக்.