நெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரழப்பு, பலர் படுகாயம்
நெதர்லாந்து நாட்டின் யூட்ரெக்ட் நகரத்தில் (டிராம்)ரயிலில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரழந்தார் எனவும் பலர் படுகாயம் அடைந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
The police is investigating the shooting at the #24oktoberplein in Utrecht this morning. An possible terrorist motif is part of the investigation.
— Politie Utrecht (@POL_Utrecht) March 18, 2019
மர்ம நபரின் இந்த கொடூரச் செயலால் இதுவும் தீவிரவாதிகளின் எச்சரிக்கை ஆக இருக்கும் என அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் ஒரு சிவப்புக் காரில் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனையை கேட்டதும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தன்னுடைய முழுக் கவனத்தையும் இதன் மீது திருப்பியுள்ளார்.
உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு, 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் மூன்று ஹெலிகாப்டர் அந்த இடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
துருக்கி நாட்டை சேர்ந்த 37 வயது கோக்மென் டானிஸ் என்னும் நபரை போலிஸார் தேடு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் அவரிடம் நெருங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
நகரம் முழுவதும், டிராம்(ரயில்) சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.