Home சினிமா கோலிவுட் அஜித், விஜய், ரஜினி: ஓவர் நைட்டில் ஒபாமாவான இயக்குனர்!

அஜித், விஜய், ரஜினி: ஓவர் நைட்டில் ஒபாமாவான இயக்குனர்!

490
0
அஜித், விஜய், ரஜினி

அஜித், விஜய், ரஜினி: ஓவர் நைட்டில் ஒபாமாவான இயக்குனர்!

தமிழ் சினிமாவின் காலச்சக்கரம் யாருக்கு எப்படி அமையும்? யாரை எப்போது கவிழ்த்தும் என்பதை கணிக்கவே முடியாது.

ஒன்றுக்கும் உதவாதவர்கள் என நினைத்த பலர் முன்னணி நடிகர்களாக உள்ளனர். உச்சத்திற்கு செல்வார்கள் என நினைத்த பலர் இருக்கும் இடம் தெரியாமலும் உள்ளனர்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரு தரமான தமிழ் படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத்.

மூன்றாவது படமே நடிகர் அஜித்தை வைத்து இயக்குகிறார். மூன்றாவது படம் அஜித் என்றாலும் சற்று மனக்கசப்பிலேயே உள்ளார் வினோத்.

அஜித் வற்புறுத்தலின் காரணமாகவே வினோத் ரீமேக் படம் இயக்கவே சம்மதம் தெரிவித்தார். இருவருக்கு இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது.

நேர்கொண்ட பார்வை படம் முடிந்த கையோடு விஜய், ரஜினியை வைத்து அடுத்தடுத்து இயக்க உள்ளார்.

வினோத்தின் நேரடி கதையில் நடித்திருந்தால் கூட ஒரு நாலு வருடம் குத்தகைக்கு எடுத்தாலும் எடுத்திருப்பார் அஜித்.

அவருடன் ஏற்பட்ட மனகசப்பில் மருந்துபோடும் விதமாக விஜய், ரஜினி என அடுத்ததடுத்து நடித்துக்கொடுக்க தயாராக உள்ளனர்.

ரஜினி நடிக்கும் படத்தில் முதல்முறையாக அவருடைய மருமகன் தனுஷும் நடிக்க உள்ளதாக சில மாதங்கள் முன்பே தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleநெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரழப்பு, பலர் படுகாயம்
Next articleதம்பிக்கு கைகொடுத்த அண்ணன்: முகேஷ் & அனில் அம்பானி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here