Home சினிமா இந்திய சினிமா ‘அல வைகுந்தபுரமுலோ’ தமிழ் ரீமேக்.. போட்டி போடும் கோலிவுட் ஹீரோஸ்!

‘அல வைகுந்தபுரமுலோ’ தமிழ் ரீமேக்.. போட்டி போடும் கோலிவுட் ஹீரோஸ்!

504
0

Ala Vaikunthapurramuloo : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுன். கடைசியாக அல்லு அர்ஜுன் நடித்து டோலிவுட்டில் வெளியான படம் ‘அல வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo). இந்த படத்தை பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்தார்.

இதில் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

அதுமட்டுமின்றி, கோடிக் கணக்கில் வசூல் மழை பொழிந்தது. தற்போது, ‘அல வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo) திரைப்படம் தமிழில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போடுகின்றார்களாம். பிரபல இயக்குநர் மோகன் ராஜா தனது தம்பியும், நடிகருமான ‘ஜெயம்’ ரவியை வைத்து இந்த படத்தை எடுக்க ஆசைப்படுகிறாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரம் தனது மகனும், நடிகருமான துருவ்வை வைத்து ‘அல வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo) படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளாராம்.

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அது ‘அல வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo)படத்தின் ரீமேக்காக இருக்கட்டும் என்று கூறி, சிவகார்த்திகேயன் ‘லைகா’விடம்  பேசி வருகிறாராம்.

இவர்கள் மட்டுமின்றி, ‘வாலு, சங்கத்தமிழன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் சந்தரும், ‘அல வைகுந்தபுரமுலோ’வை (Ala Vaikunthapurramuloo)தமிழில் சிம்புவை வைத்து எடுக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.

இந்நிலையில், ‘அல வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo)படத்தின் தமிழ் ரீமேக் உரிமையின் விலை ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.

Previous articleவிளையாட்டு வீரர்களுடன் மோடி பேசி வருகிறார்
Next article4/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here