போயஸ் கார்டன் வீட்டைக் கைப்பற்றிய ஜெயம் ரவி
சென்னைக்குள் உள்ள ஹைகிளாஸ் ஏரியாவில் ஒன்று போயஸ்கார்டன். இங்கு நிலம் வாங்குவது என்பது அவ்வளவு எளிதல்ல.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் இல்லம் இந்தப்பகுதியில் தான் உள்ளது. அவர் வீட்டின் அருகேயே நடிகர் ரஜினிகாந்தின் வீடும் உள்ளது.
ஜெயலலிதா இருக்கும் வரை இந்தப்பகுதிக்கு பிரபலங்கள் அதிகம் நிலம் வாங்க விரும்புவதில்லை.
உள்ளே நுழையும்போதும், வெளியில் வரும்போதும் அடிக்கடி ஜெக்கிங் நடைபெறும். அவ்வளவு எளிதாக புதுமுக ஆட்கள் உள்ளே நுழைந்துவிட முடியாது.
தற்பொழுது ஜெயலலிதா மறைந்துவிட்டார். இதனால் அப்பகுதியில் சற்று பாதுகாப்பு அம்சங்கள் தளர்த்தப்பட்டுவிட்டது.
இதனால் திரைப்பிரபலங்கள் அப்பகுதியில் நிலம் வாங்க முனைப்புக்காட்டி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி போயஸ் கார்டனில் வீடு ஒன்றை வாங்கினர்.
அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் போயஸ்கார்டனில் உள்ள ஒரு வீட்டை வாங்கி உள்ளார். கால்சீட் கொடுத்து வீட்டை எழுதி வாங்கிக்கொண்டார்.
தடம், சண்டக்கோழி 2, நீயா ஆகிய படங்களைத் தயாரித்த நிறுவனம் ஸ்கீரின்சீன். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயம் ரவியிடம் கால்சீட் கேட்டுள்ளார்.
தயாரிப்பாளருக்கு போயஸ்கார்டனில் வீடு இருப்பதைத் தெரிந்துகொண்ட ஜெயம் ரவி எனக்கு படத்தில் நடிக்க சம்பளம் வேண்டாம் எனக்கூறியுள்ளார்.
தொடர்ந்து மூன்று படத்தில் சம்பளம் இல்லாமல் நடித்துக்கொடுக்கிறேன். அதற்கு பதில், போயஸ்கார்டனில் உள்ள வீட்டை எனக்கு எழுதிக்கொடுத்து விடுங்கள் எனக்கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் வீட்டை எழுதிக்கொடுத்து டீலிங்கை முடித்துவிட்டாராம். ‘ஜெயா’ ‘ஜெயம்’ பெயர் ராசி கூட இடத்திற்கு ஏற்றார்போல் அமைந்துள்ளது.