காமெடி நடிகர் சார்லிக்கு இன்று பிறந்த நாள்
இவரின் இயற்பெயர் டாக்டர். வேல்முருகன் தங்கசாமி மனோகர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மார்ச் 6 ஆம் தேதி 1960 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நடிகர் சார்லி.
இவர் 800 படங்களுக்கு மேல் காமெடி நடிகராகவும் மற்றும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
இவரது பெயரில் உள்ள சார்லி என்பது ஹாலிவுட்டில் வரும் பிரபல காமெடி நடிகர் சார்லி சாப்ளின் பெயரிலுள்ள சார்லி ஆகும்.
1982 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ கே பாலச்சந்தர் அவர்களால் சார்லி என்ற பெயரில் பொய்க்கால் குதிரை என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
‘ஹுமர் ஆப் தமிழ் சினிமா’ என்ற தலைப்பில் பிஎச்டி டாக்டர் பட்டம் தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் முன்னாள் பேராசிரியர் கே புள்ளி ரவீந்திரன் இவருக்கு வழங்கினார்.
2004 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் சினிமா கலைமாமணி விருது வழங்கியது. 2018 ஆம் ஆண்டு கலைச் சிகரம் விருதும் வாங்கியுள்ளார்.
இவர் நடித்த பூவே உனக்காக, பிரண்ட்ஸ், வெற்றிக்கொடி கட்டு, கூர்க்கா, மாநகரம், உழைப்பாளி போன்ற இவரது நடிப்பை இன்றும் பேசும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரண்ட்ஸ் படத்தில் நேசமணியும் அவருக்கு அசிஸ்டெண்டாக வலம்வரும் கோபாலு என இந்த இரு கதாபாத்திரம் உலகமே சமூக வலைதளங்களில் பெரிதாகப்பேசப்பட்டது.
இவர் தமிழ் சினிமாவில் இன்று உள்ள அனைத்தும் ஜாம்பவான்கள் படங்களில் நடித்திருக்கிறார். இவரது காமெடி அருவெறுப்பு அடையாமல் மக்களை சிரிக்க வைப்பதாகவே இருக்கும்.
இவர் கடந்த சில காலங்களாக நல்ல குணச்சித்திரமான உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் நடித்த சில படத்தின் காமெடிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் ஆக வருவதை நாம் காணலாம். இன்று இவர் தன்னுடைய 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.