Home சினிமா கோலிவுட் தியேட்டர் இல்லாததால் தள்ளிப்போன பரமபதம் விளையாட்டு!

தியேட்டர் இல்லாததால் தள்ளிப்போன பரமபதம் விளையாட்டு!

304
0
பரமபதம் விளையாட்டு

த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு படம் திரையரங்கம் கிடைக்காமல் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு இன்று வெளியாவதிலிருந்து தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

த்ரிஷா 60:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை த்ரிஷா. இவர் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அண்மையில், சிம்புவுடன் இணைந்து நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

பரமபதம் விளையாட்டு

இந்த நிலையில், திருஞானம் இயக்கத்தில் 24 ஹவர்ஸ் புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு வெள்ளி அன்று வெளியாக இருந்தது.

இது த்ரிஷாவின் 60 ஆவது படம். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரௌபதி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், காதலில் கட்டுமரமாய், கல்தா, இரும்பு மனிதன் ஆகிய படங்களுடன் இப்படமும் வெளியாக இருந்தது.

ஆனால், த்ரிஷாவிற்கு வந்த சோதனையோ என்னவோ? பரமபதம் விளையாட்டு வெளியாகவில்லை.

புரோமோஷன் நிகழ்ச்சி

இதற்கு முன்னதாக நடந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளாதது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் ஹீரோயினே கலந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்று பட தயாரிப்பாளரும், நடிகருமானப் சிவா கூறியிருந்தார்.

மேலும், நான் இன்னும், படம் பார்க்கவில்லை. ஆனால், பலரும் படம் பற்றி நல்லவிதமாகவே கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விளம்பர நோக்கத்தோடு இல்லாமலும், மாஸ் ஹீரோ இல்லாமலும் உருவாக்கப்பட்ட இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.

பொதுவாக, நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் பேசும்போது எல்லாவிதமான கண்டிஷன்களுக்கு சம்மதம் தெரிவித்துதான் படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.

அப்படியிருக்கும் போது விளம்பர நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ளாத நிலையில், அவரது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை படத்தின் தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக த்ரிஷாவைப் எச்சரிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு படம் ரிலீசாகும் நேரத்தில் அதன் வெளியீட்டு தேதியிலிருந்து தள்ளிப்போவது கோலிவுட் சினிமாவில் காலம் காலமாக நடந்து வருகிறது.

இது த்ரிஷாவிற்கு மட்டும் நடப்பதில்லை. மாஸ் ஹீரோக்களின் படங்களும் பிரச்சனை காரணமாக பின்வாங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டசன் டசனாக தமிழ் சினிமாவில் புதிய படங்கள் எடுக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் ரிலீஸ் தேதி கிடைப்பதில் தான் சிக்கல் ஏற்படுகிறது.

Previous articleவிக்ரமின் கோப்ரா ஃபஸ்ட் லுக் பயமுறுத்தியதா?
Next articleRSAvsAUS 1st ODI; 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here