Home சினிமா கோலிவுட் முதலில் வந்த மாளவிகா மோகனன்!

முதலில் வந்த மாளவிகா மோகனன்!

425
0
Malavika Mohanan

Malavika Mohanan; சென்னை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு நடிகை மாளவிகா மோகனன் முதலாவதாக வருகை தந்துள்ளார்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடக்கும் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு மாளவிகா மோகனன் முதலாவதாக வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியை சன் டிவி தங்களது சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆனால், என்ன இருந்தாலும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகை மாளவிகா மோகனன் முதலாவதாக வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரைத் தொடர்ந்து ஆண்ட்ரியா, அதர்வா, விஜய் சேதுபதி, படக்குழுவினர் ஆகியோர் பலரும் வருகை தந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோ வரவேற்புரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் போது தன் மகன் தன்னை கட்டியணைக்க வேண்டும் என்று ஷோபா கேட்க உடனே மேடைக்குச் சென்ற விஜய், தனது அம்மாவையும், அப்பாவையும் கட்டியணைத்து அவர்களுக்கு முத்தம் கொடுத்து அவர்களது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஅம்மா, அப்பாவை கட்டியணைத்து ஆசையை நிறைவேற்றிய விஜய்!
Next articleரெய்டு போக வேண்டாம்: வருமான வரித்துறையினரை எச்சரித்த தீனா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here