Home சினிமா கோலிவுட் Yennai arinthal – என்னை அறிந்தால் 5 years Celebration

Yennai arinthal – என்னை அறிந்தால் 5 years Celebration

381
0
Yennai arinthal - என்னை அறிந்தால் 5 years Celebration

Yennai arinthal – என்னை அறிந்தால் 5 years Celebration. என்னை அறிந்தால் 5 வருட கொண்டாட்டம். 5 Years of Yennai Arinthaal.

என்னை அறிந்தால் (Yennai arinthal) திரைப்படம் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது ! ஆம்! என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஐந்து வருடங்கள் (5 years Celebration) ஆகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார், அருண்விஜய், த்ரிஷா, அனுஷ்கா, விவேக் அவர்கள் நடித்து ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் A.M.ரத்னம் அவர்கள் தயாரித்த திரைப்படம்தான் ‘என்னை அறிந்தால்’.பிப்ரவரி ஐந்துடன் இப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிறது.

சத்யதேவ் மற்றும் விக்டருக்கு இடையேயான விருவிருப்பான மோதலையும்; சத்யாவுக்கும் ஹேமானிக்காவுக்கும் இடையேயான காதலையும்; சத்யாவுக்கும் ஈஷாவுக்கும் இடையேயான அன்பையும்; தேன்மொழிக்கு, சத்யதேவ் மீது உள்ள காதலையும் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்கள் நமக்கு காண்பித்து இன்றுடன் ஐந்து வருடங்கள் ஆகிறது.

சத்யதேவ் மற்றும் விக்டர்

சத்யதேவ் எனும் கதாப்பாத்திரத்தில் அஜித்குமார் அவர்கள் கச்சிதமாக பொருந்திருப்பார். விக்டர் கதாப்பாத்திரத்தில் அருன்விஜய் தன் நடிப்பால் வெடித்திருப்பார்.

சத்யதேவ் மற்றும் விக்டர் கதாபாத்திரம்  நண்பர்களாக காட்டப்பட்டு பின்பு விரோதிகளாக காட்டப்படும்.

திரைப்படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் விக்டர் பேசும் ஒவ்வொரு வசனமும் அனல் பறந்தது. விக்டர் இப்படியென்றால் மறுபக்கம் சத்யதேவ் தனது வசனங்களின் மூலம் அந்த அனலை படம் பார்ப்பவர்களின் உள்ளுக்குள் கடத்தும் வகையில் கொளுத்திவிட்டிருப்பார். படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது சத்யதேவ் மற்றும் விக்டர் கதாப்பாத்திரம்தான்.

சத்யதேவும் ஹேமானிக்காவும்

ஹேமானிக்காவாக த்ரிஷா இப்படத்தில் நடித்திருப்பார். கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் இயல்பாகவே நடிப்பவர்கள் அழகாக இருப்பார்கள். ஆனால் த்ரிஷா இன்னும் ஒருபடி மேல் சென்று பேரழகாக இருந்தார்கள்.

சத்யாவும்,ஹேமாவும் நண்பர்களாக பழகி பின்பு காதலர்களாக கண்டறியப்படுவார்கள். சத்யா ஹேமாவை நோக்கி  “கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று கேட்கும் காட்சிகளில் உள்ள முழு உரையாடல்களும் படத்தின் அழகுப்பகுதி .

“என்ன அழவைக்குற ஹேமா,அது உன்னால மட்டும்தான் முடியும் வேற!”

“நமக்கு ஈஷாவ தவிர வேற குழந்தையே வேணாம்.என்ன மெடிக்கல் ஷாப்புக்கு அடிக்கடி ஓடிக்கிட்டே இருக்கனும் ! அது ஒன்னுதா பிரச்சினை “

“என்னோட ஒரு பாதி உன்கிட்ட இருக்கு” போன்ற வசனங்கள் அழகு .

சத்யாவும் ஹேமானிக்காவும்தான் படத்தின் ஆதிக்காதல்!

சத்யாவும் ஈஷாவும்

ஈஷாவாக அனிகா சுரேந்திரன் நடித்திருப்பார்கள். கனக்கச்சிதம் இந்த கதாபாத்திரத்திற்கு இவர்.சத்யாவுக்கு மகளாக இப்படத்தில் வருவார்.

ஆம்! தன்னால் பிறந்த பெண் இல்லை ஆனால் ஈஷா சத்யாவுக்கு மகள்தான். சத்யா ஈஷாவுக்கு அப்பாதான். இதுதான் படத்தின் அன்பு.

இருவர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் சிரிப்புகளென படத்தில் நிஜ அப்பாவையும் மகளையும் நாம் பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் ‘சத்யா’ என்று ஈஷா கூப்பிடும் பொழுதுகளும் அழகுதான்.

சத்யாவும் தேன்மொழியும்

தேன்மொழியாக நடித்திருப்பார் அனுஷ்கா. விமானத்தில் தேன்மொழி சத்யாவை கண்டதும் சில வசனங்களை தனக்குள் சொல்லுவார். காபி ஷாப்பில் சத்யாவின் அழகை பற்றி வருணிப்பார்.

இரு இடங்களிலுமே அனுஷ்காவின் கண்கள் வசனங்களுக்கு ஏற்ப நடித்திருக்கும் வசனங்கள் அக்காட்சிகளில் வாழ்ந்திருக்கும். சத்யாவை ஒருதலையாக காதலிப்பதாக தேன்மொழி காட்டப்படுவார்.

‘தல’ பாராட்டப்பட வேண்டியவர்

தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இப்படியான கதைக்களங்களில்  இப்படியாண பாணியில் நடித்தது மிகவும் பாராட்டக்குறியது.

அஜித் அவர்களை வழக்கம்போல் எதிர்பார்த்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தைக் கொடுத்ததும் உண்மைதான். அதேசமயம் பலருக்கு இப்படியான அஜித் நல்ல சர்ப்ரைஸாக இருந்தார் என்பதும் உண்மை.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் பாடல்களும் இப்படத்தில் பன்மடங்கு நன்றாக இருக்கிறது. குறிப்பாக ‘அதாரு ஊதாரு’ பாட்டிற்கு இப்போது வரை குத்தாட்டம் போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள.

‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலை மகள்களுக்காகவும், மகன்களுக்காகவும் தந்தைகள் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Previous articleடெல்லி தேர்தல்: அடிச்சி தூக்கும் ஆம் ஆத்மி கட்சி
Next articleகுஜ்ஜர் எங்கள் கட்சி இல்லை; அமித்ஷா சதி – ஆம் ஆத்மி மறுப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here